பக்கம்:இலக்கியக் கலை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இலக்கியக் கலை கொள்வோம். அவர்களில் இருவர், ஒரே மாதிரியாகவும் ஒரே அளவாகவும் ஒன்றில் ஈடுபடுவர் என்று கூற இயலாது. என்றாலும் அவர்கள் ஈடுபாட்டைக் குறிப்பதற்கு ஒரே சொல்தான் உண்டு. ஒரு நாட்டில் பல காலங்களில் வாழ்ந்த பல மக்களும் செய்த செயல்கள் பலவாகவே இருந்திருக்கலாம் ஆனால் அச் செயலைக் குறிக்கும் சொற்கள் புதியனவாக இருத்தற்கில்லை உதாரணத் தால் இதை நன்கு அறியலாம். நீர், வேட்கை என்று கூறப்படும் தாகத்தை எடுத்துக் கொள்வோம். ஏனைய பசி முதலியவற்றினும் சிறந்த இது. உடனே தணிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது. . சாதாரணமாக நாம் அனைவரும் தாகம் தோன்றியவுடன் நீரை அருந்துகிறோம், ஆதி மனிதனும் இதையே செய்தான். நீரைப் பருகினான் என்ற சொல்லால் இச்செயலைக் குறிக் கிறோம். இனிச் சில சமயங்களில் நீர் வேட்கை காரணம்ாக உயிர்ே ப்ோய்விடுகிற நிலமையும் உண்டாகிறது. அத்தகைய நிலையில் நீர் கிடைத்து உண்ண நேர்ந்தாலும் அதனையும் பருகுதல் என்ற சொல்லாலேயே குறிக்கிறோம். இவ்விரண்டும் செயலால் ஒன்றாயினும் மனநிலையான் கடலனைய வேற்றுமை கொண்டவை. எனினும் இவ்விரண்டையும் குறிப்பதற்கு ஒரே சொல்லைப் பயன்படுத்துகிறோம். நாளடைவில் இச்சொல் அடைந்த மாறுதல் வியப்பைத் தருவதாகும். பாலை, நிலத்தில் வழி நடக்கின்ற ஒருவன் நீர் வேட்கையால் வாடி இருக்க வேண்டும். நீண்ட தூரத்தில் காணப்படுகிற கானல் நீரைத் தண்ணீர் என்று நினைந்து மகிழ்ந்து அதனைப் பருக ஆவல் கொண்டிருக்கவேண்டும். அந்நிலையில் அவன் மனத்துள். விளைந்த மகிழ்ச்சியை அவன் கண்கள் வெளியிட்டிருக்கும் அல்லவா? இங்ங்னம் மகிழ்ந்தவன் கண்களை ஒரு கலைஞன் கண்டிருக்கவேண்டும். பின்னர் ஒரு காலத்தில் அக் கலைஞன் புரவலன் ஒருவனைக் கண்டான். அவ்வள்ளல் இக்கலைஞனை அன்பும் ஆர்வமும் நிரம்பிய பார்வையோடு கண்டான், கலைஞ னுக்கு அப்பார்வை பழைய நினைவை ஊட்டியது. முன்னர் எங்கோ அத்தகைய பார்வையைத் தான் கண்டதை நினைவு கூர்கிறான். முடிவில் அப்பாலைவனக் காட்சி அவன் மனக்கண் முன் வருகிறது. இரண்டு. பார்வைகளையும் ஒட்டிப் பார்த்த தீவிஞனிடம் ஒரு கவிதை பிறக்கிறது. அது பருகுவ னன்ன அடுக்ர் நோக்கமொடு, (பொருநராற்றுப்படை-76) என்பதாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/204&oldid=751018" இலிருந்து மீள்விக்கப்பட்டது