பக்கம்:இலக்கியக் கலை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இலக்கியக் கலை (அரவு-பாம்பு; வல்ஏறு-இடி சிலைப்பினும்-ஒலிப்பினும்: யானை தாக்குதலின் வன்மையும், பாம்பு அறியாது ம்ேல் வந்து விழும் தன்மையும், இடி திடீரென்று இடிக்கும் கொடுமையும் ஒசையால் விளக்கப்படுகின்றன. - கடம்பு அமர் நெடுவேண் அன்ன மீளி * உடபிடித் தடக்கை ஒடா வம்பலர். ஷெ 75 (கடம்பமர் நெடுவேள்-முருகன்; மீளி-இயமன், வம்பலர்.வீரர்) உடற்கட்டும் வன்மையும் உடைய வீரரை ஒலியே மனத்துள் படம் பிடித்துக் காட்டுவிடுகிறது. "குடிஞை இரட்டும் நெடுமலை யடுக்கம்" -- (மலைபடுகடாம், 320) பெரிய மலைச்சாரவில் ஆந்தை கூவும் ஒசை மனத்துள், கேட்கிறதா? - யானைக்கு, "விரவுமொழி பயிற்றும் பாகர் ஓதை' கிளிகடிமகளிர் விளிபடு பூசல் நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' தினை குறு மகளிர் இசைபடு வள்ளை" (மலைபடுகடாம், 141) மேலே காட்டப்பெற்ற சொற்கள் அனைத்தும் ஒசைகளின் வேறுபாட்டை அறிவிக்கும் சொற்களே. பெரும்பாலும் என்ன ஒலியை அவை குறிக்க வந்தனவோ அதே ஓசையை அவையும் பெற்றுத் திகழ்கின்றன. * . . . . . . . . . . . . உணர்ச்சியும் ഞെടു கவிதையின் தலையாய உணர்ச்சி எதுவாக உள்ளதோ அதற்கேற்ப ஒசையும் அமையவேண்டும். அங்ஙனம் அல்லாக்கால் அக்கவிதை ஏனைய வகையில் எவ்வளவு பொருட் சிறப்புடைதாயினும் ஒசைநயம் உடையதாகத் தோன்றாது. தமிழில் விருத்தப்பாக்கள் தோன்றுவதன் முன்னர் இதனை நன்கு. காணலாம். விருத்தப் பாக்கள் தோன்றிய பிறகு சீர்களைக் குறைப்பதாலும் மிகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/227&oldid=751043" இலிருந்து மீள்விக்கப்பட்டது