பக்கம்:இலக்கியக் கலை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246. இலக்கியக் கலை கூறல் சில நூல்களிலேயே உண்டு. மருதநில வருணனை ஆயினும், அந்நிலக் கருப்பொருள்கள் எத்தனையோ இருப்ப, சங்கு, மேதி, வண்டு என்ற இவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வரிசைப்படுத்தற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். துருவிப் பார்த்தால் அக்காரணமும் விளங்காமற் போகாது. - * - நீரிடையே சங்கம் உறங்குகிறது. ஏன்? நிழலிடை மேதி உறங்குவதால். மேதி நீரில் விழுந்து கலக்குமேயாயின் சங்கு உறங்க வழியில்லை. மேதிகள் எப்பொழுது நிழலில் உறங்கும் என்பது கிராம வாழ்க்கையில் இருந்தவர்க்கு நன்கு தெரியும். இன்பத்தை அநுபவிப்பதில் மேதிக்கு இணை ஒன்றும் இல்லை. வயிறு நிறைய ஆகாரம் கிடைத்த பிறகுதான் மேதிகள் நிழலில் படுக்கும். அவை உண்கின்ற ஆகாரமும் இருவகை. ஒன்று பசும்புல், ஏனையது வைக்கோல். பசும்புல் இல்லாதபொழுது வைக்கோலை உண்ணும். இரண்டும் உள்ளவழி புல்லையே விரும்பும். இனி இங்குக் கூறப்பட்ட மாடுகள் வயிறு நிறையப் புல் உண்டிருந்தன என்று கூறுவதற்குரிய காரணம் நான்காம் அடியில் காணக்கிடக்கிறது. வைக்கோற் போரில் அன்னம் உறங்குகிறதென்றம்ையின் இம்மேதிகள் வைக்கோலை விரும்பி உண்ணவில்லை என அறிகிறோம். எனவே இம் மேதிகள் வயிறாரப் புல்லுண்டு படுத்திருந்தன என்ற பொருளே நிலைக்கிறது. இங்ங்ணம் கூறியதால் என்ன கருத்தை ஆசிரியன் பெறவைக்கிறான்? ஒரு நாட்டில் மேதிகள் வயிறு நிறையப் புல் உண்பதற்கு வசதி இருந்ததென்றால் அது மேய்ச்சல் தரிக்" என்று சொல்லப்படும் புல்வெளிகள் இருப்பதாலேயே இயலும் மேய்ச்சல் தரிசு எங்கு இருக்கும்? மக்கள் வேண்டிய அளவு பயிர் செய்யும் நிலங்கள் இருந்தால், தானே மிகுதியை மேய்ச்சல் தரிசு என்று விடுவார்கள்? வின்ளைநிலம்ே போ த வி ல் ைல என்றால் புல்வெளி எங்கே இருக்கமுடியும்? ஆகவே மக்கள் வேண்டுமென்ற அளவு விளைநிலங்களும், அவற்றினும் மிகுதியான புல்வெளிகளும் நர்ம்டில் இருக்கின்றன் என்ற கருத்தைக் கூறியவாறா யிற்று புல்வெளிகள் நல்ல நீர்வளமுள்ள இடத்திலேயே உண்டாகுமாதலின் நீர்வளத்தை முற்கூறி நிலவளத்தைப் பிற்கூறினார். இவ்வளவு விளமுடைய நாட்டில் செல்வம் கொழித் திருக்கவேண்டும் போரும் பொழிலும் கூறப்பட்டமையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/235&oldid=751052" இலிருந்து மீள்விக்கப்பட்டது