பக்கம்:இலக்கியக் கலை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையின் கதை ". . . . . . . - 245 தன்மன்நிலையை இதற்குத் தலைவி ஒப்பிட்டவுடனேயே நாம் கவிதையின் உணர்ச்சி வெள்ளத்தில் ஈடுபடுகிறோம். - கவிதை வண்ணம் என்பவற்றுள் இதுவும் ஒன்றாகும். சாதாரணமாக நாம் காணும் பொருள்களை எடுத்துக் கொண்டு அவற்றுள் அசாதாரணமான தொடர்புகளை உண்டாக்கிக் காட்டலே இச்சக்தியாகும். இதனைச் சிறந்த கவிஞராகிய Qఐఖకు65, 'சாமானியப் பொருள்களைக் கொண்டு அசாதாரண மான தொடர்புகளை உண்டாக்கும் திறமை' என்று கூறுகிறார். தொல்காப்பியத்தில் பிரிவினை w - . . . . இவ்வளவு சிறப்புடைய இவ்வொப்புமைச் சக்தி குழந்தை களிடமும் இருப்பதைக் காண்கிறோம். குழந்தைகள் பெரும்பாலும் ஒவ்வொரு பொருளையும் ஒப்பிடும் இயல்புடையன. ஆதி மனிதனும், ஆதிக் கவிஞனும் குழந்தை இயல்பு மிக்குடையவரா யிருந்தமையின் உவமையைக் கையாண்டனர். உவமையணி இல்லாத சிறந்த கவிதையே இல்லை என்று கூறிவிடலாம். ஏனைய அணிகள் எல்லாம் அழிந்து இவ்வொன்று மட்டுமே எஞ்சிநின்றாலும் கவிதை சிறப்போடிலங்கும். தொல்காப்பியனார். இவ்வுவமையை நான்காகப் பிரித்தார். வினை; பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றி உவமை கூறல் உண்டு என்று கூறினர்ர். இவை, முறையே புலியன்ன. மறவன், மாரியன்ன வண்கை: துடியன்ன இடை, பொன்போல் மேனி' என்பவற்றால்: தெளிவாகும். முன்னர்க் கூறியபடி ஒரே ஒர் இயல்பைக் கொண்டு மட்டும் இவை உவமிக்கப்பட்டிருத்தல் கண்கூடு. புலியன்ன மறவன் என்று கூறுகையில் மறவனின் வீலிமை புலியின் வலிமைக்கு மட்டும் உவமிக்கப்படுகிறதே தவிரப் புலியின் பிற "இயல்பு. களைப்பற்றி ஒன்றும் நினிைக்கப்படவில்லை என்பதை அறிதல் வேண்டும். இவ்வாறில்லாமல் இந்நான்கு இயல்புகள் பற்றியும்’ உவமை கூறுதல் உண்டு. அவ்வாறு கூறின் அது கவிஞனின் சிறந்த' சக்தியையே வெளியிடும். 'பல்துடுப் பெடுத்த அலங்குலைக் கரந்தள் அணிம்லர் நறுந்த்ாது ஊதுந்தும்பி க்ையாடு வட்டில் தோன்றும்" له . مانند " و "م ” (தூக்கிய பல துடுப்புக்கள் போலும் அசையும காந்த்ளினது அழகியமில்ரின் நல்ல தேனைக் குடிக்கும் வண்டு கையில் வைத்து ஆடும் சூதாடு கருவிபோலுள்ளது.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/264&oldid=751084" இலிருந்து மீள்விக்கப்பட்டது