பக்கம்:இலக்கியக் கலை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை, இலக்கியம், இலக்கணம் 295 ஆக்கவும் பழகுகிறான். இறுதியில் உள்ள மரபியல் அவனது கல்வியறிவின் பயனாகும். பரந்த அநுபவத்தில் கண் ட உண்மைகளையும் பொருள்களையும் ஒவ்வொரு பெயரால், வழங்குகிறான். ஏன் அந்தப் பொருளுக்கு அப்பெயர் வந்தது என்றால் யாரும் அதற்கு விடையிறுத்தல் இயலாது. கோழிக் குஞ்சு என்றும், யானைக் குட்டி என்றும் பெயரிட்டவர் என்ன கருத்தோடு இட்டனரோ அறியோம். எனினும் அதுவே மரபாக வந்து தங்கிவிட்டது. இதுவரையில் கூறியவற்றிலிருத்து சில உண்மை க ள் தெற்றெனப் புலனாகும். உலகிடையே தோன்றி வளர்ந்த பண்பட்ட மொழிகளில் தமிழ்மொழி ஒன்று என்பதும், அம்மொழியை வளர்த்த தமிழர் பண்பட்டவர்கள் என்பதும் அறிகிறோம். அவர்கள் வாழ்க்கை முழுவதையும் எடுத்து ஆய்ந்த இலக்கியம் அதனை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தது. என்றும், அப்பிரிவு இலக்கிய வசதிக்கு எற்பவே செய்யப்பட்டது என்றும் அறிந்தோம். மேலும் இப்பிரிவுகள் வாழ்க்கையை ஒட்டியே உண்டாயின என்பதும், இலக்கியம் வாழ்க்கையோடு பொருந்தியே உண்டாயிற்று என்பதும், இவ்விலக்கியத்தை முன்னிட்டுத் தோன்றிய இலக்கணமும் வாழ்க்கையைப்பற்றிக் கூறியுள்ளதென்பதும் அறிந்தோம். Socialogical Treatise, 1. 2. Social Life. 3. Economic thought. 4. Possessive Instinct. 5. Instinct of Self preservation. ~ : 6. f6eał Nature. 7. தொல். அகத்திணை. கு 1. உரை. 8. தொல், புறத்திணை. கு 1. 9. Sex Instinct. - 10. Abnormal minds, 11. Subnormal minds. 12. It may mean ‘Motive’ here.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/314&oldid=751140" இலிருந்து மீள்விக்கப்பட்டது