பக்கம்:இலக்கியக் கலை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 24 கவிதை பிறந்த கதை மொழியுடன் பிறந்த கவிதை கவிதை எப்பொழுது பிறந்தது? எங்கே பிறந்தது? ஏன் பிறந்தது? எவ்வாறு தோன்றிற்று? இரண்டு வரிகளில் நான்கு கேள்விகள் கேட்கப் பெற்றுவிட்டன. ஆனால் இவற்றிற்கு விடை தருவது. அவ்வளவு எளிதன்று. கவிதை எப்பொழுது பிறந்தது என்றால் உலகத்தில் மனிதன் தோன்றி வளர்ந்த காலத்திலிருந்தே கவிதையும் தோன்றி வளருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் ஆதிமனிதன், விலங்கினத்திலிருந்து வேறு பிரிக்கப்பட முடியாத நிலையில் வாழ்ந்த காலத்தில், ஒரு வேளை கவிதை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு நினைவு என்ற ஒன்று தோன்றியபொழுதே கவிதை உணர்ச்சியும் தோன்றியிருத்தல் வேண்டும். ஆதிமனிதன் பொருள்சளைக் கண்டு அவற்றின் அழகில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இன்னும் சிறிது காலம் செல்லவேதான் அநுபவித்த அழகினைப் பிறருக்கு எடுத்துக்கூற முற்பட்டிருக்க வேண்டும். நாளடைவில், எடுத்துக் கூறும் முறையில் தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆதிமனிதன், தான் தோன்றிப் பல காலம் கழித்தே பேசத் தொடங்கினான் என்றும், அதுவரையில் குறியீட்டு மொழியாலேயே ஆன் கருத்தை வெளியிட்டான் என்றும் மொழிநூல் வல்லார் கூறுவர். ஆதலின் பொருள்களின் அழகில் ஈடுபடும் இயல்பு ஆதிமனிதனுக்கு முன்னரே கிட்டியிருப் பினும் மொழி தோன்றி ஒரளவு வளம்பெற்ற பின்னரே கவிதை பிறந்திருத்தல் வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. கூட்டத்திலே கவிதைப் பிறப்பு ஆனால் இன்று நாம் கவிதைக்குக் கூறும் இலக்கணம் ஒன்றும் அதிமனிதன் கவிதைக்குக் கூறல் இயலாது. அவனுடைய பாடல்கள் மிகச் சாதாரணமானவையாய் இருந்திருத்தல் வேண்டும். அதிலும் மிகப் பழமையான ஆதிமனிதன் கூட்டங்கூடி வாழாமல், சமுதாயமாய் இருக்காடில், தனி மனிதனாகவே வாழ்ந்த காலத்தில் இக்கவிதையைப் பற்றிய சிந்தன்ையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/316&oldid=751142" இலிருந்து மீள்விக்கப்பட்டது