பக்கம்:இலக்கியக் கலை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298. இலக்கியக் கலை, தூண்டுகிறாள். அவர்கள் பாடியனவாக அமைந்துள்ளவை இளங்கோவடிகள் இயற்றியவை ஆயினும் நாட்டில் அங்கங்கே நடைபெற்ற குரவைப் பாட்டைப் போலவே அவை பாடப் பட்டுள்ளன. சொல்லும் பொருளும் இளங்கோவடிகளுட்ையன. பாட்டின் பண்ணும் முறையும் நாடோடிப் பாடலாகிய குரவைப் பாடல்களில் உள்ளன. அந்த குரலைப் பர்டல்களை "சமுதாயப் பாடல் என்று கூறல் முற்றும் பொருந்தும். ஏன் எனில் அவர்களது சமுதாயம், பாட்டை வைத்து வாழ்க்கை நடித்திய ஒன்றாகும். பலர் கூடிய காரணத்தாலேயே இப் பாடல் தோன்றியிருத்தல் வேண்டும். இத்தகைய பாடல்களில் வெளியிடப் பெறும் கருத்துக்களும், சமுதாயத்தைப் பொறுத்தவையேயாகும். ஆயர்குலத்தார் ஆடிய அக்குரவையில் பசுக்கள் நன்றாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தை இளங்கோவடிகள் அமைத் திருக்கிறார். ஆய்ச்சியர் பாடும் மூலக் குரவைப் பாடல்களிலும் அத்தகைய கருத்துக்களே இருத்தல் கூடும். அவை நீண்ட ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றும் பாடல்கள் அல்ல. பலர் கூடியவழித் தோன்றக் கூடியதும் பொள்ளென வெளிப்படுவதுமான உணர்ச்சியே இப்பாடல்கள் தோன்றக் காரணமாயின. சிலப்பதிகாரத்தில் மற்றோர் இடத்தில் காணப்பெறும் வேட்டுவ வரிக்கும் மூலமான குரவைப்பாடல் நாட்டில் வழங்கி வந்திருக்க வேண்டும். அதுவும் இதே இனத்தைச் சேர்ந்ததே யாம். இதன்கண் பலர்கூடித் தம்முள் ஒருத்திக்கு இறைவியின் வேடம் இட்டு அவள் எதிரே நின்று வழிபட்டுப் பாடுதலைக் கர்ணலாம். பலருங்கூடி முன்னிலைப் பராவல் எனக் கூறும்படி பாடுவதைக் காண்க. - கொற்றவை கொண்ட அணிகொண்டு கின்றவிப் பொற்றொடி மாதர் தவம்என்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்தகுடிப் பிறந்த விற்றொழில் வேடக் குலனே குலனும் (சிலம்பு-வேட்டுவவரி) இவ்விரண்டு இடங்களிலும் பாடல் சமுதாய மூலமாகத் தோன்றினும், அவை சிறந்த உணர்ச்சிப் பெருக்கத்தையோ சிறந்த குறிக்கோளையோ காட்டாமல் பலரது உணர்ச்சியை வெளியிடும் கருவியாக அமைந்திருத்தல் கண்கூடு. இத்தகைய பாடல்களே. சமுதாயப் பாடல்கள் என்று கூறப்பெறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/318&oldid=751144" இலிருந்து மீள்விக்கப்பட்டது