பக்கம்:இலக்கியக் கலை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் அநுபவமும் 307 அறிவை மறைத்தெழும் அநுபவம் , இவ்விரண்டு உதாரணங்களையும் மனத்துட் கொண்டு கவிதைக்கு வருவோம். கவிதை தோன்றும்பொழுது அறிவின் உதவி மட்டும் கொண்டு தோன்றுவதில்லை. கவிஞன் ஏதோ ஒன்றில் ஈடுபடுகிறான், ஈடுபட ஆரம்பித்தபொழுது அவன் தன் நினைவோடு அறிவின் துணைகொண்டுதான் ஈடுபடுகிறான். அவன் அவ்வாறு தான் அப்பொருளில் ஈடுபட்டதாக அறிகிறவரை அவ்வீடுபாடு முற்றியது என்று கூறுவதற்கில்லை. ஈடுபடுகிற கவிஞன், ஈடுபடும் பொருள், ஈடுபாட்டால் உண்டாகும் சுவை என்ற முன்று பொருள்கள் அங்கிருக்கின்றன. இந் நிலையில் இம்மூன்றையும் இருக்குமாறு செய்வது அவன் அறிவேயாகும். இன்னும் ஈடுபாடு முற்ற முற்ற, இவ்வறிவு கொஞ்சங் கொஞ்சமாக மறைகிறது. முன்னர்க் கூறிய மூன்றனுள் இரண்டு ஈடுபடும் அவனும், ஈடுபாட்டிற்குரிய பொருளும்) மெல்ல மறையத் தொடங்குகின்றன. இறுதியில், அதாவது ஈடுபாடு அல்லது அநுபவம் முதிர்ந்த நிலையில் எஞ்சியிருப்பது அநுபவம் ஒன்று மட்டுமேயாகும். இந்நிலையில் அதாவது தான் வேறு, அநுபவம் வேறு என்றில்லாத நிலையில் கவிஞன் எவ்வளவு காலம் இருக் கிறான் என்று கூறல் இயலாது. இறுதியாக அவன் வெளிவரும் பொழுது அவனுடைய அநுபவம் முழுத்தன்மை பெற்ற ஒன்றாக அவனுள் தங்கிவிடுகிறது. அங்கு அதுவரை அறிவின் வேலை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. * ... . . . . . அநுபவத்தில் தோன்றும் கலை இவ்வாறு அவனுள் தங்கிய அநுபவம் மெல்ல மெல்ல வடிவு பெறுகிறது. அது பெறும், வடிவம் அவன் எக்கலையில் வல்லவனோ அதைப் பொறுத்தது. கவிஞனாயின் இவ்வடிவு பெற்ற அநுபவம் கவிதை விருப்பெறுகிறது. இறுதியில் அது - - * - so SS S SSAAAASSSS S S & • ‘. . . . . . . --- ...: --- -, கவிதையாகவே , வெளிப்படுகிறது. ஆகவே, இவ்வநுபவம் §: ; ; ; " 3 : ة يع، ة الأة. -- . . .” . . . . 一、 - *... . . . . . - எவ் வடிவில், வெளிப்ப்ட்டாலும். (கவிதை, ஓவியம், இசை, சிற்பம்) இது அவன்பெற்ற அநுபவமே தவிர வேறு அன்று. அதன் வெளிப்பீட்டிற்கு மாற்ாக அவன் அறிவே ஏதாவது தடங்கல் கூறினும், பிறர் அறிவு தடங்கல் கூறினும் அக் கலைஞன் அதைப் பொருட்படுத்துவ தில்லை. அங்கனம் ஒருவன் அநுபவமே வடிவுபெற்று வெளிப்பட்டதர்தலின் ன் அக்கலையை நாமும் அநுபவிக்க வேண்டுமே தவிர, அறிவில் துணை தொண்டு ஆராயவேண்டுவதில்லை. அவன் அறிவின் உதவியால் கிண்ட் அறிவியல் உண்மையாயின் நர்மும் அறிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/327&oldid=751154" இலிருந்து மீள்விக்கப்பட்டது