பக்கம்:இலக்கியக் கலை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 371 இல்லாமல் ஒவ்வொரு சிறு செயலும் நாடகத்தின் இன்றியமையாத உறுப்புக்களாக இருக்குமாறு அமைப்பதும் உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரும்பாலான இத்தொகுப்பைச் சேர்ந்தவை. பாத்திர அமைப்பு பொது அமைப்பு இத்தகையது என்று கண்ட பிறகு பாத்திர அமைப்பைப்பற்றியும் காண்டல் வேண்டும். தமிழ் நாடகங்களில் பாத்திரங்கள் பற்றிய அதிகக் கவலை இருப்பதாகவே தெரியவில்லை. நாடகம் பார்த்துவிட்டுத் திரும்புபவர்கள் பேசிக் கொள்வதைக் கவனித்தால் இவ்வுண்மை விளங்கும். ஆசிரியர் கதையை இப்படி முடித்திருக்கக் கூடாது; அப்படி இருந்திருத்தல் வேண்டும் என்று பேசுவார்களே தவிர வேறு இல்லை. எப்படி ஆசிரியர் நாட்கத்தை முடித்திருந்தாலும் கவலை இல்லை. அம் முடிவு மனிதப் பண்பின் ஒரு கூறுபாட்டை விளக்குவதாக அமைய வேண்டும். இன்றேல் அந் நாடகத்திற்கும் அத்தை, பாட்டி கதைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. செயல்கள் விறுவிறுப்புடன் ஒன்றன் பின்னர் ஒன்றாய் அடுக்கி வருவதே நாடகம் விறுவிறுப்புடன் நடைபெறுவதற்கு அறிகுறி என்று தற்கால விமர்சகர்கள் எழுதுவதையும் பல சந்தர்ப்பங்களில் காணுகிறோம். :மனிதப் பண்பாட்டை விளக்காத எந்த ஒரு செயலும் பகுதியும் நாடகத்தில் இருப்பது பயனற்றது என்று ஹென்றி ஆர்தர் ஜோன்ஸ் கூறுகிறார். ஷேக்ஸ்பியரின் மாக்பெத்' நாடகம் இலக்கிய '. உலகில் அழியாது நிற்ப்தன் காரணம் அதில் நடைபெறுகிற கொலைகளாலும், அல்லது நாடக ஆசிரியன் ஒப்பற் - சூழ்ச்சியானும் அல்ல. - அந்நாடகம் நிலை பெறுவதன் காரணம் மர்க்பெத் என்ற மனிதனின் பண்பாட்டை விவரிப்பதே யாகும். திரு. சம்பந்த முதலியாரின் சபாபதி, நாடக த்தில் ஒப்பற்ற சூழ்ச்சி ஒன்றும் இல்லை. அதில் வரும் தமிழ் ஆசிரியரும், சபாபதி என்ற வேலைக்காரனும் நாட்டிலிருந்து விடைபெற்றுச் சென்று அரை நூற்றாண்டு. ஆகிவிட்டது. என்றாலும் அந் நாடகம் ஏன் இன்னும் நிலைத்திருக்கிறது: நம் அனைவரிடமும் ஒரளவு சபாபதித் தன்மை இருக்கிறது. அதிகாரிகள் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/392&oldid=751226" இலிருந்து மீள்விக்கப்பட்டது