பக்கம்:இலக்கியக் கலை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் - 378. நாம் தெரிந்துகொள்ளுமாறு செய்பவன் சிறந்த நாடகாசிரியன் அல்லன், மனிதன் என்றால் அவன் பற்பல குணங்கட்கும் கொள்கலம். அவனுடைய எல்லாப் பண்புகளையும் வெளியிட வேண்டும் என்ற காரணத்தால் அளவுமீறிய உரையாடல்களைப் பெய்வதும் தவறு. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மிகுதியான ஒன்றிரண்டு குணங்களைக் கற்பித்து அவற்றை நன்கு விளக்க வேண்டும். வெறுங் குணங்களை வெளியிடும் கருவிகளாக மட்டும் இப்பாத்திரங்கள் அமைந்தால் போதாது. காணப்பெறும் அக் குணங்கள் நாடகம் நன்கு விறுவிறுப்புடன் முன்னேறிச் செல்லக் காரணமாக இருத்தல் வேண்டும். மற்றொரு வகையாகக் கூறுமிடத்து ஒரு பாத்திரத்தின் பல குணங்களுள்ளும் எந்தப் பண்பாடு அந்த நாடகத்தின் சூழ்ச்சிக்கு ஏற்றதோ, அந்தப் பண்பாடே மிகுந்து விளங்க வேண்டும் இப் பகுதியில் ஒரளவு தவறு நேர்தலும் உண்டு. குணங்களை நன்கு விளக்கவேண்டும். என்ற ஆவலால் தூண்டப்பெற்றுச் சிறந்த ஆசிரியர்கள்கூட அதிக தூரம் சென்றுவிடுவதுண்டு. அதாவது பாத்திரத்திற்குக் குணம் கற்பிப்பது போகக் குணங்களைத் தாங்கும் கருவியாகப் பாத்திரத்தைப் படைத்துவிடுதலும் உண்டு. மனோன்மணியத்தில், குடிலன் இவ்வாறு படைக்கப்பட்டவனாவான். குண விளக்கம் தான் தோற்றுவித்த பாத்திரத்தின் குணாதிசயங்களை நாம் அறியச்செய்ய நாடகாசிரியனுக்கு உள்ள வழிகள் சிலவே. புதின ஆசிரியன் தன் பாத்திரங்கள் செய்யும் செயலுக்கெல்லாம் காரணமும் சமாதானமும் கூறுமுகமாக அவர்கள் குணங்களையும், இயல்புகளையும் நாம் அறியுமாறு செய்யலாம். ஆனால், நாடகத்தில் இது இயல்வதன்று. தன் பாத்திரங்கள் ஒருவருக் கொருவர் செய்யும் உரையாடலாலும், கதையின் அடிப்படையான். சூழ்ச்சியின் அமைப்பாலும், பாத்திரங்கள் செய்யும்ெேசயலர்லுமே நாம் அவர்களின் குணாதிசயங்களை அறிதல் கூடும். மற்றொரு வகையாகக் கூறுமிட த்து ஒவ்வொரு செயலும், ேைபச்சும் செயற்கையாகத் தோன்றாதபடி அமையவேண்டும். அதிலும் அம். பாத்திரத்தின் பண்பை விளக்குவதாக அமையவேண்டும் பாத்திரங்களின் மிகுதியான குணங்களைக் சூழ்ச்சியும், செயல் களும் அறிவிக்கும். சிறு பண்பாடுகளையும் மன நிலையையும், போராட்டங்களையும் உரையாடல் அறிவிக்கும். ம்ேலும், ஒரு பாத்திரத்தின் புண்பை நாம் பல வழிகளில் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/394&oldid=751228" இலிருந்து மீள்விக்கப்பட்டது