பக்கம்:இலக்கியக் கலை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 - இலக்கிய்க் கலை கட்சியை நசுக்கும் காட்சி வருகிறது. ஐந்தாவது முடிபு இதில் முரண் முடிந்து விடுகிறது. நாடகத் தொடக்கம் இங்ங்னம் ஐந்து பிரிவுகளாக நாடகத்தைப் பிரித்துக் கூறிய காரணத்தால் நாடகம் ஐந்து களங்களுடன் நிகழவேண்டும் என்பது கருத்தன்று. திறனாய்வு செய்ய வச்தியாக இப்பிரிவுகளைச் செய்து கொள்ளலாமே தவிர, நாடகம் இப்படித்தான் அமைய வேண்டும் என்ற கருத்தில்லை. பார்க்கப் போனால் இங்குச் செய்த பிரிவினை கூட முழுவசதியும் அளிக்கும் என்று கூறுவதற்கில்லை. முதலாவது தொடக்க நிகழ்ச்சி என்று கூறப்பெறுகிறது. ஆனால் முரணும் குழப்பமும் ஏற்படக் காரணம் ஒன்று இருக்தல் வேண்டும் அன்றோ? அந்தக் காரணம் எங்கு விளக்கப்படல் வேண்டும்? அதுவும் தொடக்க நிகழ்ச்சி என்ற விடத்தில்தான் காட்டப்பெறல் வேண்டும். - தொடக்கநிகழ்ச்சி நாடகத்தின் மிக இன்றியமையாத பகுதியாகும் இத் தொடக்க நிகழ்ச்சி. பழைய கிரேக்க நாடகங்களுள் "கூட்டப்பாட்டு என்ற ஒன்றின் மூலம் இது தொடங்கிற்றர்ம், இன்று அவ்வாறு நாடகங்கள் தொடங்கினால் மக்கள் உடனே தூங்க ஆரம்பித்து விடுவார்கள். வேறு எவ்விதம் நாடகம் தொடங்குவது? நாடகத்தில் பல பாத்திரங்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் அனைவரும் பார்க்க வந்திருப்பவர்கட்குப் புதியவர்கள்தாமே? இவர்களில் முதலில் யாரை அறிமுகம் செய்து வைப்பது? எவ்வாறு அறிமுகம் செய்துவைப்பது? முதன்முதலில் இரண்டு பாத்திரங்களாக அரங்கில் தோன்றினால் இத்தொல்லை மிகுதிப்பட்டு விடுகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து விடுகிறார்கள் என்றாலும், அவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை விளக்குவது மிகக் கடினம். எனவே, நாடக ஆசிரியனை மதிப்பிட அவனது 'நாடகத்தின் முதல் அங்கமே துணைசெய்கிறது. திருமதி *ஸ்டோவி என்பார் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு :எப்படிப் பாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தாலும், இறுதி ல்வில்வைப்புமுறை தவறு என்றுதான் உணருகிறேன்' என்று கூறு கிர். இவ்வாசிரியர் கூறியது. புதினத்திற்கு. என்றால் அங்கத்தைப் புற்றிக் கேட்கவேண்டுமா? தற்காலம் தமிழ்நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/397&oldid=751231" இலிருந்து மீள்விக்கப்பட்டது