பக்கம்:இலக்கியக் கலை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 . . இலக்கியக் கலை நிறையக் காணப்பெறும். அவல நாடகங்களில் நாடகத்தலைவன் வீழ்ச்சிக்கு முன்னர் அவனுடைய சிறப்புக்களை மிகுதிப்படுத்திக் காட்டுவதும் இம்முறை பற்றியதே, அவன் வீழ்ச்சியடையும் பொழுது சற்று முன்னர்க் கண்ட அவனுடைய சிறப்புக்கள் வீழ்ச்சியை மிகைப்படுத்திக் காட்டும். இதுவே வேறுபாடு என்பது. இராவணன் வீழ்ச்சிக்கு முன்னர் அவன் சிறப்புக்களைப் பெரிதாக்கிக் கம்பன் கூறுவதும் இம் முறையேயாம், இராமனுக்குக் கூறாத அவ்வளவு சிறப்புக்களை இராவணனுக்கு ஏற்றுவதால் இராவணன் வீழ்ச்சி மிகப் பெரிதாகக் காட்சியளிக்கிறது. ஒருவேளை காப்யியம் என்ற காரணத்தால் நாம் இந்த அழகைக் கவனியாது இருந்துவிடுவோம் என்று கம்பன் நினைத்தான் போலும்! இல்லாவிட்டால் இராவணன் இறந்த பிறகு, மும்மடங்கு பொலித்தன அம் முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்க்ள் அம்மா!' (கம்பன். இராவ. வதை, 201) என்று கூறுவானா? இறந்த பிறகும் இவ்வளவு பொலிவுடைய முகமாக விளங்கிற்று என்றால் இருந்தபொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நம்மை நினையுமாறு தூண்டுகிறான். சிலப்பதிகாரம் என்ற காப்பியமும் இவ்வமைதியை மேற்கொள் கிறது. மேலும் அது நாடகக் காப்பியம் என்றும் கூறப்பெற்ற காரணத்தால் இது முற்றும் பொருந்தும். அவ்வழகிய நூல் எவ்வளவு அமைதியுடன் - - "திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குண்டபோன்றிவ் அங்கண் உலகு அளித்திலான் (சிலப். மங்கல வாழ்த்து. 1) என்று தொடங்குகிறது? ஆனால் இறுதியில் ஓர் அரசன் இறக்க அவன் ஊர் தீப்பட, தலைவி வீடுபேற்றை அடைய இவ்வளவு களேபரத்துடன் அல்லவா முடிகிறது? திங்களைப் போற்றிய அமைதி எங்கே? ஊர் சுட்ட அமளி எங்கே? இதுவே வேறுபாடு வேறுபட்ட நிகழ்ச்சிகள் தோற்றுவிப்பது ஒருவகை வேறுபாடு பாத்திரங்களிலும் வேறுபாடு’ அமைத்து நாடகம் தோன்றும், நன்மை வடிவான நாடகம் தலைவனுக்கும் தீம்ை வடிவான எதிர்ப் பாத்திரத்திற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/403&oldid=751239" இலிருந்து மீள்விக்கப்பட்டது