பக்கம்:இலக்கியக் கலை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் - 885 என்ற கருத்துடன் சூர்ப்பநகை கூறுகிறாள். இவர்கள் அனைவரும் முறையே சசியையும், உமையையும், திருமகளையும் பெற்றார் கள். நீயோ சீதையைப் பெற்றாய் என்று இறந்த காலத்தாற் கூறி உங்கள் அனைவரையும் ஒப்பு நோக்கின் அவர்கட்கு நன்மை இல்லை. உனக்குத்தர்ன் என்றும் கூறுகிறாள் மூக்கிழ்ந்த அத் தங்கை தமையனை நோக்கி. ஆனால் முன்னர்க்கூறிய இரட்டுற மொழிதல் என்னும் அழகால் ஆசிரியன் நமக்கு வேறுபொருள் விளங்குமாறு கூறுகிறான். அவன் கூறிய சொற்களைப் பிரித்துப் பார்த்தால் டிண்மை விளங்கும். - --- அந்தரம் பார்க்கில் நன்மை அவர்க்கு இலைஉனக்கு டினக்கு இதனால் நன்மை இல்லை; அறிவுதான் என்ற பொருளும் இதில் விளங்குதல் காண்க. . . . * ~ * , நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலும் இச் சந்தர்ப்பம் ஒன்று வருகிறது. கண்ணகியோடு மதுரை சென்ற கோவலன் அவள் சமைத்த உணவை உண்டு. அவள் கையால் தந்த அடைக் காயையும் மென்று அவட்கு ஆறுதல் மொழி கூறிவிட்டுப் புறப்படு கிறான். அவள்பால் எஞ்சியிருந்த சிலம்பைக் கொண்டு சென்று விற்று வருவதற்காகவே புறப்படுகிறான். புறப்படும் நேரத்தில்தான் இதுவரை செய்த செயல்கட்குப் பச்சாதாபம் மேலிட்டவுனாகி அவளுக்கு ஆறுதல் மொழி கூறிச் செல்கிறான். அவன் விரைவில் சிலம்பை விற்று மீள்வன் எனப்பேதைக் கண்ணாகி நினைக்கிறாள். அவனும் அவ்வாறேதான் நினைந்து புறப்படுகிறான். ஆனால் நாம் அறிவோம் அவன் வாராவழியில் புறப்ப்ட்டுவிட்டான் என்று. இந்நிலையைக் கூறுகிறார் இளங்கேர் அடிகள். கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சிறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய் மாறி வருவன் மயங்காதொழிகென - (சிலப்பதி : 1.6 : 63) 'சில்ம்பை o மாறிவர் ೧ಿ. என்றால் விற்று வருகிறேன் என்பதுதான் பொருள். கோவலன் கருதிய பொருளும் கண்ணகி அறிந்துகொண்ட் பொருளும் அதுவே. ஆனால் நாடகம் காணும் (அல்லது கேட்கும்) நாம் அறியும் பொருள் அதுவன்று. மாறி என்றால் உயிருடன் செல்லும் நான் பிண்மாகி வருவேன் என்ற பொருள்பட அவன் கூறியதை @. -25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/406&oldid=751242" இலிருந்து மீள்விக்கப்பட்டது