பக்கம்:இலக்கியக் கலை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 இலக்கியக் கலை நிகழ்ச்சி அமைப்பு - - இந்நிலையில் சிறுகதையில் நிகழ்ச்சி அமைப்ப்து பற்றி ஒரு வார்த்தை கூறவேண்டும். புதினம் ஒரு பெரிய திரையில் தீட்டப்பெற்ற ஒவியம் போன்றது. அதில் மலை, அருவி, காடு விலங்குகள், மக்கள் என்ற பல பொருள்கள் இருக்கலாம். ஆனால், ஒவியத்திறனாய்வாளன் ஓவியத்தின் சிறப்பை ஆராய்கையில்துாரத் திலிருந்து அதனைப் பார்த்துவிட்டு அதனுடன் அமைவதில்லை. பக்கத்தில் வந்து ஒவியத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் பார்த்து ஆராய்கிறான், அச்சிறு பகுதியே பெருஞ் சித்திரமாக அமைக்கப் பெறுதலும் உண்டு. இங்ங்ணம் சிறு பகுதி பெரிதாக அமைக்கப் பெறுகையில் மிகவும் கவனத்துடன் அமைக்கப்பட்டால் அன்றி அது சிறப்பிழந்து விடும், முழு ஒவியத்தில் அழகுடன் காணப்பெற்ற அதே பகுதி தனிப்படக் காணப்பட்டால் அழகிழந்தும் போகலாம். அதே போல் ஒரு நிகழ்ச்சி புதினத்தில் சிறப்படையலாம். ஆனால், சிறுகதையில் அது வெறுப்பை விளைக்கலாம். இவ்வுண்மையை நன்கு மனத்தில் பதித்துக்கொண்டு சிறு கதைகள் எழுதப்படல் நன்று, ஒன்றுக்கு, மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது. என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப்படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்துவிடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்த முறை நிகழ்ச்சிகள் அதிகப்படினும் ஒரு நடுநிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை. அமைதல் நன்று. சிறுகதையும் கவிதையும் ஏறத்தாழ ஒத்த பண்புடையவை என்றுகூடக் கூறலாம், ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச்சொல்லிப் பதிய்வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது. சிறுகதைக்ளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் ಕ್ಲಗ್ತtಣ್ಣಕ್ಹಿಂಗ್ಡಿ ಇರಕಹಿಹಿ, 'r arಿಕೆ”ಕೆ சுழல்ல்ப்ட்டுக் கரு ம் ம்ே க்ண்ண்ாயின்ார் எ ன்று திரியும் நழக்கு அது பெரித்ாகப் படுவதில்லை, ஆனால், தக்க இந்தின்லயில் அதே நிகழ்ச்சி கிறுகதையில் இடம் பெறின்”நம்ம்ைக் கவர்ந்துவிடுகிறது. இந்நிகழ்ச்சி தேர்ந் தெடுக்கப் பெறுகையில் ஒன்றிரண்டு கவனிக்கப்படல் வண்டும் சிறுகதை எல்லைக்குள் . அடங்கும் நிகழ்ச்சி ல் ☾ է.1 سیسا டு &Ꭾ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/415&oldid=751252" இலிருந்து மீள்விக்கப்பட்டது