பக்கம்:இலக்கியக் கலை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை, 893 இராமாமிர்தம், அகிலன் போன்றவர்கள் (1950 சிறந்த கதைகளை எழுதுகின்றனர். இவருள்ளும் சிலர் அடிக்கடி எழுத வேண்டிய இன்றியமையாமை ஏற்படும்பொழுது சிறிது மட்டமான கதைகளும் எழுதுகின்றனர். பாத்திரப் படைப்பு சிறு கதைகள் பற்றிய சில கருத்துக்களைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். புதினங்களில் வரும் பாத்திரங்கட்கும் சிறு கதைகளில் தோன்றும் பாத்திரங்கட்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. புதினத்தில்வரும் பாத்திரங்களுடன் நாம் அதிகம் பழக முடிகிறது. புதினத்தின் நீட்சி காரணமாக ஒரு பாத்திரத்தின் வளர்ச்சி முழுவதையும் நாம் அறிய முடிகிறது, முழு வளர்ச்சி பெற்ற அப்ப்ாத்திரங்கள் நம் மனத்தில் அப்படியே தங்கியும் விடுகின்றன. முழுத்தன்மை பெற்ற இப்பாத்திரங்கள் உயிருள்ளவர் கள் போல் நம்மால் என்றும் நினைவில் இருத்தக்கூடிய தன்மையும் தகுதியும் வாய்ந்தவை. வாழ்க்கையிலும் ஒருவருடன் நீண்டகாலம் பழகினால்தானே அவர்களை நினைவில்கொள்ளமுடிகிறது? ஏதோ ரயிலில் ஒருவரைப் பார்த்துப் பொழுதுபோக்குக்காக அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, நம் ஊருக்கு வந்தால் நம்மைத் தவறாமல் வந்து காணுமாறு பன்முறை அவரிடிம் கூறி விட்டுத்தான் வருகிறோம். ஏன்றாலும் அவர் ஒரு மாதம் கழித்து நம்மைச் சந்தித்தால், யார் என்றுதான் கேட்போம். கரரணம் அவருடைய பழக்கம் நிலையான ஒரு நினைவை நம்மிட்ம் உண்டாக்கவில்லை. ஆனால், அதே மனிதரிடம் ஒரு ஆண்டு பிழ்கியிருப்பின் அவ்வளவு விரைவில் மறத்தல் இயலாது. ஆனால், சிறு நேரச் சந்திப்பாக இருப்பினும் அச் சந்திப்பில் ஏதேனும் சிறந்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பின் நாம், அவரை மறக்கமாட்டோம். அல்லது நாம் பெரிதும் விரும்பி மதிக்கும் ஒரு பண்பு அவரிடம் இருந்து, அதை அச்சிறு நேரத்தில் நாம் கர்ண நேரிட்டிருந்தால் அப்பொழுதும் அவரை நாம் மறக்கமாட்டோம். இதே நிலைதான் சிறுகதைப் பாத்திரங்கட்கும் ஏற்படுகிறது. நீண்ட நாள் பழகிய வரை மறவாததுபோலவே,புதினத்தின் பாத்திரங்கள் மனத்தில் தங்கிவிடும். ஆனால், சிறுகதைப் பாத்திரங்கள் இதனி மாறுபட்டிநிலையுடையஆைஎனவே, ஒரு சிறுகதை நம் மனத்தில் தங்கவேண்டும்ாயின் இரண்ட்ே வழிகள்தாம் உண்டு முற்கூறிய்படி அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்ல் வேண்டும்; இன்றேல் அதில்ரும்பத்திரி நாம் மதித்து விரும்பும் ஒப்பறி பின்பு ஒன்றைப்பெற்றித்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/414&oldid=751251" இலிருந்து மீள்விக்கப்பட்டது