பக்கம்:இலக்கியக் கலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இயல்புகள் 48 (எ) குறிக்கோள் "இலக்கியம்' எனும் சொல்லைப்பற்றிய ஆய்வுரையில், "இலக்கு' எனும் வேர்ச்சொல்லிற்குக் குறிக்கோள்' என்பது பொருள் என்பதைக் கண்டோம். எனவே, விழுமிய குறிக்கோள் களைக் தன்னகத்தே கொண்டு வழிகாட்டும் வல்லமை வாய்த்தது இலக்கியம் என்பதையும் அறிந்தோம். . - | & ஒவ்வொரு மொழியிலும், அம்மொழி பேசும் மக்களுடைய 'வீறார்ந்த குறிக்கோள்கள் “இலட்சியக் கனவுகளாக, சித்திரிக்கப் பட்டுள்ளன. இந்த இலட்சியக் கனவுகளைக் காலந்தொறும் பதிவுசெய்து, அடுத்துவரும் தலை முறையினருக்கு அறிவுறுத்துவது இலக்கியம். அந்த இலட்சியங்கள் அழகு பற்றியனவாகவும், வாழ்வியல் உண்மைகள் பற்றியனவாகவும் அமைந்துள்ளன. அழகு பற்றிய உண்மைகள் அழியக் கூடியன; அல்லது காலந்தோறும் மாறக்கூடியன. ஆனால், வாழ்வியல் உண்மைகள் என்றும் நிலை பெற்று விளங்குவனவாகும். - . . நிலைபேறில்லா உலகில், நிலைபெற்று வாழும் உண்மைகளே காலம் கடந்துவாழும் மெய்ப்பொருள்கள் எனப் போற்றப்படுகின் தன. - ; : - - - உலகப் பழம்பெரும் நாகரிக நாடுகளின் சிறப்புமிகு குறிக்கோள்கள் எல்லாம் அவர்களுடைய இலக்கியங்களின் மூலமே இன்றுவரை உலகில் வாழ்ந்துவருகின்றன. பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய, சீன, இந்தியப் பண்பாடுகளின் விழுமிய இலட்சி வங்களே தெரிவிக்கின்றன. ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறெந்த நாட்டிலும் அனைத்து உலக சகோதரத்துவம் பற்றிய சிந்தனை அரும்பவில்லை. இன்றைய பொதுவுடைமையாளர் காரல்மார்க்லே, முதன் முதலில் இக் கோட்பாட்டை உலகிற்கு வழங்கியவர் எனப் பெருமிதத்தோடு கூறுவர். ஆனால், தமிழ்நாட்டில், சங்ககாலப்புலவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் அனைத்து உலக சகோதரத்துவக் கோட்பாட்டைத் தமிழ்மொழியின் மூலம் அறிவுறுத்தி யுள்ளதைப் புறநானூறு எனும் தமிழிலக்கியம் தெரிவிக்கிறது. இத்தகைய நிலைபேறுடைய புத்துலகச் சிந்தனையைப் போன்று ஒலிக்கும் குறிக்கோள்கள் பல, இன்றும் பண்டை உலக இலக்கியங்களில் வீறுடன் விளங்குவதைக் காணுகின்றோம், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/59&oldid=751274" இலிருந்து மீள்விக்கப்பட்டது