பக்கம்:இலக்கியக் கலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இலக்கியக் கலை இன்பத்தை நமக்கு அது அளிக்கிறது. கருத்து ஆழமும், கற்பனை வளமும், கலையழகும் வாய்ந்த நூலே, நம் உள்ளத்தைக் கவரும் தன்மை உடையதாகிறது. இத்தன்மையே முதன்மையான இலக்கிய இயல்பாக, அறிஞர் சி.டி. விஞ்செஸ்டர் போற்றுகிறார்." இந்த உணர்ச்சியே இலக்கியத்திற்கு என்றும் வாழும் நிலைபேற்றுத் தன்மையை, அளிக்கிறது. - - இலக்கியம் இன்புறுத்துவதோடு அமையாது, அறிவுறுத் துவதாகவும் செயல்படுகிறது. படிப்பவருடைய உள்ளத்தைச் செம்மைப்படுத்தி பண்படச் செய்து நன்னெறியில் நாட்டம் கொள்ளுமாறு தூண்டுவது இலக்கியத்தின் மற்றொரு பொதுப் பண்பாகும். இலக்கியத்திற்கே பெரிதும் உரிய தனிப்பெருஞ் சிறப்பு இயல்பு' எனவும் இதனைக் கூறலாம். . . . இன்புறுத்துவதை மட்டும் இலக்கியத்தின் நோக்கமாக ஒரு காலத்தில், மேல்நாட்டவர் கருதினர். ஆனால், இன்புறுத்து வதோடு வாழ்க்கையைத் திருத்தி, செம்மைப்படுத்தும் ஆற்றல் உடையதாக இலக்கியம் விளங்க வேண்டும் என்ற கருத்து இப்பொழுது வலுவடைந்து மனித வாழ்க்கையில் அடிப்படையாகக் கொண்டு தோன்றுவதே இலக்கியம். மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பதன்மூலம், அது தனிச் சிறப்புமிக்க கலையாகத் திகழ்கிறது. எனவே, வாழ்க்கையின் தீவிரப் பங்கினை அது கொள்ளுகிறது. வாழ்க்கையை ஆராய்கிறது. அதன் நிறைகுறை களை அம்பலப்படுத்துகிறது; அதிலிருந்து படிப்பினைகளைப் பெறத் தூண்டுகிறது. இவற்றின் மூலம், வாழ்க்கையைச் செம்மைப்படுத்த சீர்ப்படுத்த அது முயலுகிறது. (ஊ) கற்பனை உலகப் பெருங்கவிஞர்களான நக்கீரர் வள்ளுவர், இளங்கோ, கம்பன், பாரதி, காளிதாசன், ஹோமர், வெர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், கெதே, புஷ்கின், மாகோயோவோஸ்கி போன்றோரின் இலக்கியப் படைப்புகளை ஆராய்கின்ற பொழுது, அவற்றின் தனிச்சிறப்புப் பெரிதும் புனைந்துரைப்பதாகிய கற்பனைத் திறனையே அடிப்படையாகக் கொண்டு அம்ைந்துள்ளதைக் காணுகின்றோம். இதிலிருந்து கற்பனைத் திறனாகிய புதியன படைக்கும் ஆற்றல், முதன்மையான இலக்கியப்பண்பாகத் தோன்றுகிறது. அதனைப்பற்றிப் பின்னர் விரிவாகக் காணலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/58&oldid=751273" இலிருந்து மீள்விக்கப்பட்டது