பக்கம்:இலக்கியக் கலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய்த்தின் இயல்புகள் 45 இ H வடிவமே, இலக்கியவடிவமாகப் போற்றப்படலாயிற்று. என்வ்ே, இங்கு இலக்கியத்தின் புறவடிவக் கூறுகளைச் சுட்டுகின்றபொழுது கவிதையின் வடிவ இயல்புகளையே குறிப்பிடுகிறோம் என்பதன்ை மறத்தலாகாது. யாப்பும் அன்னியும் வடிவத்தில் பண்புகள் அல்லது கூறுகளாக அமைவன கவிதை யின் வடிவ அம்ைப்பில் முதன்மை இடம்பெறும் அடிகள் ஆகும். அவ்வடிகளில் அமையும் சீர், தளை, தொடை எதுகிை, மோனை, ஒலிநயம், உவமை, உருவகம், படிமம் போன்ற அணிநயம் முதலியவையே இலக்கியத்தின் புறத்துறு பண்புகளாகும். மொழி இலக்கியத்தின் புறத்துறு பண்புகள் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. சொற்கள். மொழியின் கூறுகளாகும். எனவே இலக்கியத்தின் முதுகெலும்பாக இருப்பது மொழி. மொழியைச் செம்மையைக் கையாளுவதிலேயே இலக்கியப் படைப்பு வலிவும், வனப்பும் பெறுகிறது. கலையழகிற்குக் காரணமாகிய சொல்நயமும் பொருள்நயமும் உணர்த்தும் முறையும் இலக்கியப் படைப்பாளன் பயன்படுத்தும் மொழியின் ஆற்றலையும் செயற் பாட்டை யும் ஒட்டியே அமைகின்றன. இதனால்தான், இலக்கியத்தைச் 'சொல் துறை (Workurst) எனும் பொருளுடைய ஜெர்மானியச் சொல்லும், 'சொல் தன்மை' (sloves nost) எனும் ருஷிய மொழிச் சொல்லும் லிட்டரேச்சர் (Literature) எனும் ஆங்கிலச் சொல்லிற்கு ஈடான தத்தம் மொழியில் இலக்கியத்தைச் சுட்டும் கலைச் சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலக்கியத்தின் மொழியமைதி உணர்வு எழுச்சியைக் கொண்டது. அதில் குறியீடுகளும் சொல்லின் ஒலிக்குறிப்பும், ஒலித்யமும் ஒன்றாகச் சேர்ந்து இயங்குகின்றன. இதன்ால் இலக்கியம் செஞ்சொல் கவியின்பம் வாய்ந்ததாகச் சிறப்புறுகிறது. கால்வகைப் பண்புகள் இதுவரையில் நாம் விரிவாகப் பார்த்த இலக்கியத்தின் பல்வேறு இயல்புகளைத் தொகுத்து, உணர்ச்சி, கற்பனை, கருத்து வடிவம் எனும் நால்வகைப் பண்புகள்ாகத் தெளிவுறுத்தலாம். இவற்றுள் வடிவம் இலக்கியத்தின் உடலாகும். உண்ர்ச்சியை இலக்கியத்தின் இதயம் எனக்கருத இடமுண்டு, இலக்கியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/63&oldid=751279" இலிருந்து மீள்விக்கப்பட்டது