பக்கம்:இலக்கியக் கலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 o இலக்கியக் கலை தில் இடம் பெறும் கருத்துக்கள். அறிவுத்திறனை அடிப்படை யாகக் கொண்டவை. எனவே கருத்தினை இலக்கியத்தின் மூளை'யாகப் போற்றலாம். இலக்கியத்தின் மற்றப் பண்புகள் எல்லாம் இந்த நான்கு, முதன்மையான உறுப்புகளின் பல்வேறு கூறுகளாகப் பொருத்திக் காட்டக்கூடியனவாக உள்ளன. மேற்கண்ட விளக்கத்தில் இருந்து இலக்கியத்தின் இயல்பு களை நாம் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். இலக்கியத்தைப் பற்றிய பொருத்தமான வரையறை இலக்கணத்தை வகுக்க இயலாத நிலையில், அதன் பண்புகளைக் கொண்டு இலக்கியத்தை எளிதில், இனம் கண்டுகொள்ளலாம். - . . . உண்மையும் அழகுணர்வும் நிறைந்த ச்ொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக்காட்டுவது இலக்கியம். அது ம்னிதனுடைய ஆன்மாவையும், ஆளுமையையும் உணர்ச்சி களையும், நோக்கங்களையும், விழுமிய சிந்தனைகளையும், சொற் களால் குறிப்பாகப் புலப்படுத்துவது. அதன் சிறப்பு இயல்புகள் கலையழகு, குறிப்பாற்றல், நிலைபேற்றிற்குரிய பண்புகள், பொதுமை, ஆளுமைவெளிப்பாடு முதலியனவாகும். இலக்கியத்தின் நோக்கம் நம்மை மகிழ்வித்தலோடு மனிதனின் உண்மை இயல்பை அறிவுறுத்தலுமாகும். மனிதனுடைய செயல்களைக் கர்ட்டிலும், அவனுடைய ஆன்மிக இயல்புகளை உணர்த்துவதுதான் இலக்கியத் சிறந்த நோக்கமாகும். 1 M. H. Alerams, The mirror and the lamp, p. p. 31.32 2. இலக்கிய இயல் அஆ. பக் 50-51 8, டிை, பூக், 51-54, - - 4, Roger Fowler(Ed), A Dictionary of Modern critical o Terms, pp. 103-104. - --- - - - - - - - - - 5 நெடுநல் வாடை எனும் நக்கீரருடைய பத்துப்பாட்டின் பெயரினை இந்த அடியுடன் ஒப்பிட்டுக் காண்க. 6. காண்க : இலக்கியமும் உளவியலும் 7. ஆசிய ஜோதி பக். 86. - 8. Sartre's Collected papers, (Ed) Edeith kern, prentice Hall, Inc.; New Jersey 1962, p. 132 - 9. C.T. winchestser, о. р. сit. р. 42 Sartre's Some Principles of Litterery Criticism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/64&oldid=751280" இலிருந்து மீள்விக்கப்பட்டது