பக்கம்:இலக்கியக் கலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் மரபுகளும் 55 நாடகம் பார்த்துத் திரும்பும் எந்த அறிவாளியும் மூன்று மணிநேரத்தில் எங்ஙனம் இவ்வளவு செயல்கள் நடைபெற முடியும்; இது பொருத்தமில்லை' என்று கூறுவதில்லையே? ஏன்? அதனை மரபாக உணர்ந்து, ஏற்றுக்கொள்கிறோம். நாடக அரங்கத்தில் திரைச்சீலைகள் தொங்குகின்றனவே; அவற்றில் ஒன்றில் ஒரு தெருவின் படமும் வீடுகளின் படமும் எழுதியுள்ள்தாக வைத்துக்கொள்வோம். ஆனால், அத் திரைச்சீலை அகலம். நீளம் என்ற இரண்டு "பரிமாணங்களையே உடையதாயினும், உயரம் கலந்த முக்கூட்டுப் பரிமாணமும் அதில் இருப்பதாக நாம் உணர்கிறோம். ஏன்? மரபு பற்றியே. கலையில் உள்ள மரபுகளில் இன்றியமையாதது" ஏற்றுக்கோடலாம். அதிலும் மெய்ம்மையல்லாத ஒன்றை மெய்ம்மை என்று ஏற்றுக்கொள்வதாம். இனி இலக்கியத்தில் எவை எவை மரபுபற்றிப் பயில்கின்றன என்று சற்றுக் காண்போம். திணைப்பிரிவும் மரபும் மரபு பற்றிப் பயிலப்படும் முதலாவது பொருள் நிலமாகும், நிலத்திற்குக்கூட மரபு தேவையா என்று கேட்கத் தோன்று கிறதன்றோ? ஆம்! நிலத்தை நான்காகக் கற்பித்த தமிழ் இலக்கியம் இவை ஒல்வொன்றிற்கும் வாழ்க்கை முறையையும் கற்பித்துள்ளது. இந்நிலங்களையும் , அவற்றில் வாழ்கின்ற உயிர்களாகிய உயர்திணை அஃறிணைப்பொருள்கள் முதலிய வற்றையும் மரபுபற்றியே கூறிக்கொண்டு வந்துள்ளது, ஆனால், இலக்கியத்தில் தலையாய கவிதை தோன்றும் பொழுது. சில சந்தர்ப்பங்களில் இக் கட்டுப்பாட்டை மீறியும் வெளிவரலாயிற்று. இதனை நன்கு தெரிந்த தமிழன் தன்மரபை மாற்றிக்கொள்ளத் துணிந்து, அங்ஙனமே மாற்றியுங் கொண்டான், மரபு என்பதே சான்றோர் செய்த ஒன்றுதானே. அவர்களாகப் பார்த்து அதை மாற்றினால், அதனால் நேரும் இழுக்கு ஒன்றும் இல்லையன்றோ? கவிதை ஆக்கும் கலைஞனைவிடச் சிறந்தோர் யார் இருக்க இயலும், ம்ரபை ஆக்கவும் அழிக்கவும்? எனவே, நாளாவட்டத்தில் ஒரு திணைப்பொருளை மற்றொரு திணையில் கூறும் இயல்பு தோன்றியவுடன் திணைமயக்கம் என்ற ஒன்றை வகுத்தான். இம் முறையில் இலக்கணமும் உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்றும் வரையறை செய்தது. மரபு பற்றி வகுக்கப் பெற்ற நால்வகை நிலம் இயற்கையின் கூறுபாட்டால் அழிந்தால் அதனை என்னவென்று கூறுவது? அதற்கும் மரபு பிறழாமல் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/73&oldid=751290" இலிருந்து மீள்விக்கப்பட்டது