பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இலக்கியக் காட்சிகள்


உலகில் தோன்றும் உயிர்கள் இன்ப நாட்டம் உடை யன. இன்பம் தான் அமர்ந்து மேவுகின்ற தன்மை வாய்ந் தது. மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளும் மனித மனத்தை அலைத்து அரித்துக் குலைப்பனவாகும். மனமெனும் குரங்கு இம் மூவாசைகளைப் பற்றினால் அதனால் விளையும் துன்பங்கள் கோடி கோடியாகும்.

ஆசைகள், பற்றுகள் பல வகையென நாம் முன்பே கண்டோம். ஆசையே அனைத்துலகத் துன்பங்களுக்கும் காரணம்’ என்பர். எனவேதான்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

(திருக்குறள் : 350)

என்றார் திருவள்ளுவர். சுந்தரமூர்த்தி நாயனாரும்,

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத

தன்மை வந்து எய்தினேன் கற்றவர் தொழுதேத்தும் சீர்க்

கரையூரில் பாண்டிக் கொடுமுடி கற்றவா உன்னைநான் மறக்கினும்

சொல்லும்கா நமச்சி வாயவே.

(ஏழாந்திருமுறை; திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகம்)

ஆசைகளிலேயே பெரிய ஆசை பிறவி ஆசையே. இறைவன் அருளுக்குப் பாத்திரமாகி அவன் அடியினை அடையாதவர் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அலைப் புறுகின்றனர்.