பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?

உலகில் எண்ணிறந்த உயிர்கள் பிறக்கின்றன; கால வேகத்தில் வளர்கின்றன; வாழ்கின்றன. இறுதியில் இறந்து முடிகின்றன. மனிதர்களில் ‘தோன்றிற் புகழொடு தோன்றியவர் உரையும் பாட்டும் உடையோராய் வாழ்ந் தவர். ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தவர், ஒரு சிலராகவே இருக்கக் கூடும்.

சிலர் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வாழ் கிறார்கள்; பலர் எப்படியும் வாழலாம் என்று வாழ் கிறார்கள். முன்னவர் வாழ்க்கையை முன்னோர் சென்ற நெறியும் உயரிய கொள்கைகளும் வழிநடத்திச் செல் கின்றன; பின்னவர் வாழ்க்கை, குறிக்கோளிலாத வாழ்க் கையாய் அமைகிறது. குறிக்கோளும் கொள்கைகளும் இல்லாமல் வாழ்வு நடாத்திச் செல்வது, கடிவாள்ம் இல்லாத குதிரைமேல் சவாரி செய்வதை ஒக்கும், நல்ல கொள்கைகள், சான்றோர் உணர்த்திவிட்டுச் சென்றநெறி நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும். இன்றேல் ஒட்டைப் படகில் பயணம் செய்து நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தவன் கதையாய்ப் போய் முடியும்.

இ. கா.-7