பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வரவு 129

வலம்சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள், அப் பூக்களை இழந்தனவாக வருந்து மாறு, வல்லவன் ஒருவன் அக்கொம்புகளை அடித்து உதிர்த்துவிட விளங்கும் கொம்பு எவ்வாறு இருக்குமோ அதுபோல, மராமரத்தை, அதன் மலர்கள் முற்றும் உதிரு மாறு தாக்கி வருத்தும் தன்மை வாய்ந்ததும், மணத்தைத் தன்னிடத்தே கொண்டதுமான தென்றற் காற்று, பாலை வழியிலே செல்லும் மள்ளர்களது குழன்ற மயிரிலே அம் மலர்களைச் சொரியா நிற்கும் என்று தென்றற்காற்றின் சீரிய பணி சுட்டப்படுகின்றது.

புரியிணர், மெல்லவிழ் அஞ்சினை புலம்ப, வல்லோன் கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி மராஅ மலைத்த மணவாய்த் தென்றல்.

(அகநானுாறு : 21 : 9-12.)

தாயங் கண்ணனார் பாடியுள்ள பாலைத்திணைப் பாடலொன்றிலும் இளவேனிற்காலத் தென்றற்காற்றின் செலவு குறிப்பிடப் பெறுகின்றது. போலிவற்ற காம்பினை யுடைய பாதிரியின் வரிகள் பொருந்திய நிறமுடைய திரட்சி கொண்ட மலர்கள், மெல்லிய கொடியாகிய அதிர லோடுஞ் சேர்ந்து, நுண்மையான மணலிடத்தே அறலுண் டானது போல அழகு காட்டி நிற்கும். பாம்பின் பல் லினைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த குராவினது, வண்டினம் ஒலிக்கும் நறிய கொம்புகளிலே, தென்றற் காற்று ஊடறுத்துச் செல்லும், குயில் கூவுதல் பயின்று கொண்டிருக்கும். இத்தகைய தன்மை வாய்ந்தது இள வேனிற் காலம் என்று புலப்படுத்தியுள்ளார்.

புன்காற் பாதிரி அருகிறத் திறள்வி நுண் கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப அரவெ யிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்

இ.கா.-9