பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இலக்கியக் காட்சிகள்


தேனிமிர் நறுஞ்சினைத் தென்றல்போலக் குயில் குரல் கற்ற வேனில்.

(அகநானுாறு; 237 :1-5)

அடுத்து, தமிழின் முதற்பெருங் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலம்பதிகாரத்திலும் தென்றற் காற்றின் இனிய வரவு மூன்று இடங்களில் கிளத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, காப்பியத் தலைவன் கோவலனும் கதைக்கு நாயகி கண்ணகியும்திருமணத்திற்குப் பின்னர்ப் புதுமனை புகுத்தப்படுகின்றனர். உத்தரகுருவின் ஒப்பத் தோன்றிய கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும் மயன் விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலைமாடத்து இடை நிலத்து இருந்த எல்லையில், தென்றல் வந்த பாங்கினைச் சீர்சால் இளங்கோவடிகள் பின்வருமாறு வருணித் துள்ளார்.

செங்கழு நீர், சேதாம்பல், முழுவதும் இதழ் விரிந்த குவளை, அரும்பு அற மலர்ந்த தாமரை, வயற்பூக்கள், பிறவான பூக்கள், சிறப்புப் பெருந்திய தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள், சண்பகச் சோலையில் மாலை போலப் பூத்துக் கிடக்கும் மலர்கள் ஆகியவற்றின் தாதுக் களையெல்லாம் தேடிச்சென்று, வாரியுண்டு ஒளிபொருந் திய முகங்கொண்ட மாதரின் சுருண்ட கூந்தலிலேயிருந்து வரும் மணத்தையும் பெறுவதற்கு வழி காணாமல் சுழன்று சுழன்று திரியும் வண்டுகளுடன் தென்றலும் வந்து, அழகுடைய சாளரத்தின் வழியே புகுந்து அவ்வீட்டி னுள்ளே நுழைந்தது. கோவலன் கண்ணகியர் இருவரும் தென்றலின் வரவால் பெரு மகிழ்வு எய்தினர்.

‘கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை அரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை வயற்பூ வாசம் அளை இ, அயற்பூ மேதகு தாழை விரியல் வெண்டோட்டுக்