பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு 49

காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்க மாகிய வெறியும், அந் நிலத்துள்ளார் (குறிஞ்சி நிலம்) வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ் வெறி இந் நிலத்திற்குச் கிறந்தது என்பர் இளம்பூரன்ர்.

வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிதினையா ஐய கனிநீங்க ஆடினாள்-மையல் அயன்மனைப் பெண்டிரோடு அன்னை சொல் அஞ்சி வியன்மனையுள் ஆடும் வெறி’

என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் ட Tட ெை) எடுத்துக் காட்டி. இது காமவேட்கை தோற்றாமல் தலை மகள் தானே முருகுமேல் நிறீஇ ஆடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுட் கண்டு கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

தெய்வங்கள், பரவி வழுபடுவார் மீது தோன்றித் தான் கூறவேண்டுவனவற்றைக் கூறும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டிலும் ஈழத்து வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையே இன்றும் நிலவுவதாக அறிகிறோம்.38 பழங்காலத்தில் மக்கள் கூத்தாட்டு நிகழும் பொழுது முருகன், வழிபடும் பூசாரியின் மேல் வந்து வெளிப்பட்டுத் தான் கூற வேண்டியவற்றைக் கூறுவான் என நம்பினர். சமய நம்பிக்கையினை ஒருவாறு உரைக்கும் இவ் வழக்கு, பண்டைய காதல் ஒழுக்கத்தின் ஒரு துறையினையும் ஒளியாமல் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். தோழி வெறியாட்டு எடுக்கும் பொழுதும், தலைவி மெலிந்து

32. புறப்பொருள் வெண்பாமாலை, இருபாற் பெருந்திணை 10.

33. டாக்டர் சு. வித்தியானந்தம், தமிழர் சால்பு : பக்கம் 111.

இ. கா.-4