பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி

சங்க நூல்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான் கலித்தொகை, கற்றறிந்தா ரேத்துங் கலி’ என்று ஆன்றோராற் பாராட்டப்பெறும் பெருமையுடைய தாகும். கலிப்பா வகையுட் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. இந்த நூல். இச் செந்தமிழ்ப் பெருநூல் தேன்செறிந்த மொழிகளாலும் தெள்ளிய உருவகங்களாலும் இயன்ற கற்போருள்ளத்தைக் கவருந் தகைமைத்தாம். மக்கள்தம் நால்வாழ்விற்கு வேண்டிய நன்னெறிகள் பலவற்றை இடையிடையே தொகுத்தும் விரித்துஞ் சுட்டிச் செல்வதும் இந் நூலின் சிறப்புக்களில் ஒன்றாம்’ என்பர்.

பிற்றை நாட் புலவர்களாலும் கலித்தொகை போற்றப் பட்டது என்பதனைப் பின்வரும் பாடல்கொண்டு அறிய

•ı) fT LD.

திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன் விருத்தக்க கவிவளமும் வேண்டேம்-திருக்குறளோ கொங்குவேள் மாக்கதையோ கொள்ளேம் பொங்குகலி யின்பப் பொருள். (கனியார்வேம்

1. கலித்தொகை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு; பதிப்புரை. ப. 5, 6.