பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இலக்கியக் காட்சிகள்


தேடும் முயற்சி மேற்கொண்டு பிரியக் கருதிய த ைல மகனைத் தோழி’ அவன் தலைமகளை விட்டுப் பிரியா திருப்பதற்கு ஏதுக்கள் சிலவற்றைக் காட்டி நிற்கிறாள். மறப்பரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந் தனtர்’ என்று சாடுகின்றாள். ‘தம் கைப் பொருள்களைப் பிறர்க்கு ஈந்து தீர்த்துவிட்டுத் தாம் வந்து நம்பால் இரந்து நிற்பவர் சிலர்; அத்தகையோர்க்கு நாம் இல்லையெனச் சொல்லி வழங்காமற் போவது இழிவன்றோ?’ என்று எண்ணி, மலை பல கடந்து செல்லவும் ஒருப்பட்டனை. அவ்வாறு மலை பல கடந்து தேடிவரும் பொருள்தான், பொருளால் பெறும் பயனை உனக்குத் தருமோ? நிலை பெற்ற கற்பினையுடையவளான இவள், நீ பிரிந்தால் உயிர் வாழாது இறந்தொழிவாளே. இவள் மார் பைத் தழுவிய படியே இவளை வாழச்செய்து பிரியாதிருத்தலன்றோ உண்மையான செல்வம் ஆகும்.’’ என்று தலைமகனைத் தெருட்டினாள் தோழி,

தொலைவாகி இரங்தோர்க்கொன் றீயாமை இழிவென நிலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ நிலைஇய கற்பினாள், கீ ப்ேபின் வாழாதாள் முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை.”

மேலும், தோழி, தலைமகளின் கற்பு மேம்பாட்டினை, ‘தொல்லியல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்’9 ‘வடமீன் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் 10 என்னும் தொடர்களால் புலப்படுத்துகின்றாள். இவ்வாறு நிலை .ெ ப ற் ற கற்பினையுடையவளென்றும், வ ட மீ ைன ப்

- ===---

7. பாலைக்கலி: 1 : 9-10.

8 கலித்தொகை; பாலைக்கலி; 1 : 11-14 9. கலித்தொகை; பாலைக்கலி; 1: 17.

O

I கலித்தொகை; பாலைக்கலி; 1 : 21.