பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி 55.

போலப் பலரும் தொழுதுபோற்ற விளங்கும் உயர்ந்த கற் பினையுடையவளென்றும் த ைல வி பாராட்டப்பெறக் காணலாம்.

தலைவனின் துன்பத்திற்குத் துணையாக நிற்கத் தலைவி பெரிதும் விரும்புகின்றாள். எனவே,

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு’

என்று, தலைவனுடைய துன்பத்திற்குத் துணையாக நின்று துன்பத்திற் பங்கு கொள்வதே தனக்கு இன்பம் பயக்கும் நல்வினை என்று எண்ணிக் களிப்புறுகின்றாள் தலைவி.

இடைச்சுரத்திடை முக்கோற்பகவரைக் கண்டு, உடன் போக்கு ஒருப்பட்டுச் சென்ற தலைவி குறித்துச் செவிலித் தாய் உசாவிய போதும், முக்கோற்பகவர், தனைவி இறந்த கற்பினாள்’ என்றும், அவளுக்கு ஏதும் துன்பம் விளை விக்காதீர்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

‘உலகமே வறட்சியால் துயருற்ற காலத்தும், மழை யைப் பெய்விக்கும் கற்புச் சக்தி யுடையவளான இவன் மனைவி’ என்று கலித்தொகை காட்டும் தலைவி ஒருத்தி விளங்குகின்றாள்:

வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்.’

மேலும் தலைவனும் தலைவியும் இளமைச் செவ்வியும் காமவிருப்பமும் ஒருங்கே பெற்றவர்களாதலின், சாதா ரனப் பொருட் செல்வத்தினை விரும்பி இவற்றைத் துறத் தல் கூடாது என்றும், வாழுநாள் வரையிலும் இணைந்தும் பிணைந்தும் நிற்றலே வாழ்வாவது என்றும், வறுமை

11. கலித்தொகை; பாலைக்கலி; 5: 10-11. 12. கலித்தொகை; பாலைக்கலி; 8 . 22. 13. கலித்தொகை; பாலைக்கலி; 16.20.