பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இலக்கியக் காட்சிகள்


காரணமாக ஒரு துண்டு ஆடையே உடுப்பவராக வாழ்ந் தாலும், அதனைப் பொருட்படுத்திக் கவலையில் ஆழாது, ஒன்றிக் கலந்து வாழ்பவரின் வாழ்க்கையே சிறந்த இன்ப வாழ்க்கையாகும் என்றும், காரணம், கழிந்துபோன இள மையை மீட்டுத் தருவதென்பது எவருக்கும் அரிதான செய லாகும் என்றும் தோழி பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவனிடம் கூறி, இல்வாழ்க்கையின்-கற்புநெறியின் இனிய பெற்றியினை எடுத்துரைக்கின்றாள்:

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? உளநாள் ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு.4

அடுத்து, குறிஞ்சிக் கலியில் கபிலர் தலைவியை அரு மழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையள்’ என்று குறிப்பிடுகின்றார். மேலும், தலைவியின் காதல் நெஞ்சத் திற்கு மாறாகத் திருமணம் நடக்குமேயானால், வள்ளிக் கொடியிலே கிழங்கு கீழே வீழாது; மலைமுகட்டில் தேன் கூடுகள் உண்டாகா தினைக்கொல்லையிலும் கதிர்கள் வளமாகத் தோன்றா” என்று தோழி, சிறுகுடியில் வாழும் மலைவாழ்நரைப் ப ா ர் த் து அச்சுறுத்தும் வகையில் தலைவியின் கற்புச் சிறப்பினைக் கழறுவதனைக் காண GR) TLD .

சிறுகுடி யீரே சிறு குடியிரே == வள்ளிகீழ் விழா; வரைமிசைத் தேன்தொடா

14. கலித்தொகை; 17 : 5-22