பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நாடக இலக்கியம்

தமிழ், முத்தமிழ் என்று வழங்கப்படுகிறது. இயல், இசை, கூத்து என்ற முப்பிரிவுகள் தமிழில் அமைந்து ‘முத்தமிழ்’ என வழங்கப்படுகின்றது. கூத்து எனினும், நாடகம் எனினும் ஒன்றே. திருவள்ளுவர் கூத்து’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிங் தற்று.

(திருக்குறள் 332)

கூத்து முடித்த பின்னர், கூத்தைக் கண்டு களித்த மக்கள் கூத்தரங்கை விட்டு ஒப்ப வெளியேறி விடுவதைப் போலவே, செல்வம் ஒருவனிடமிருந்து போனவுடன் அவனைச் சுற்றி வாழ்ந்த மக்களும் போய்விடுவர் என்பதை இக் குறள் அறிவுறுத்துகின்றது. இக் குறளால் திருவள்ளுவர் காலத்தில் கூத்துக்கலை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வந்தது என்பதனை விளக்கமாய் அறி கிறோம். அருணகிரிநாதரும் முத்தமிழும் முருகப் பெரு மானுக்கு உவப்பளிக்கும் திறத்தனவே என்பதனையும், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இறைவனைச் சச்சிதானந்தர் என்று வழங்குபவர் ஆன்றோர்! சத்து இயற்றமிழையும், சித்து இசைத்தமிழையும், ஆனந்தம் நாடகத் தமிழையும் குறிப்பிடும். இயற்றமிழ், கற்றுவல்ல அறிஞர்க்கே