பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 65

விளங்குவதாகும். இசைத்தமிழ், இசை உணர்ச்சி ஒரளவு இருந்து கேட்போர்க்கு இனிமை வழங்குவதாகும். நாடகத் தமிழோவெனில் படித்தறியாப் பாமரர்க்கும் கண்ணுக்கும் செவிக்கும் மனத்திற்கும் ஒருங்கே புரிவித்து இன்பம் நல்கு வதாகும்.

சங்க காலத்தில்

சங்க காலத்தில் நாடகத் தமிழ் நல்ல நிலையில் இருந் தது. இயல் இசை ஆகிய இரண்டன் சேர்க்கையால் உண் டாகும் நாடகத் தமிழில் ஈடுபட்ட கலைஞர்கள் கூத்தர்’ என வழங்கப்பெற்றனர். ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியனார்,

கூத்தரும் பாணரும் பொருங்ரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்.

(தொல். பொருள்; 88 : 3-6)

எ ன் று கூத்தரை முதலாவதாகக் குறிப்பிட்டுள்ளார். கூத்து என்ற சொல் முதற்கண் நடனத்தைக் குறித்துப் பின், கதை தழுவி வரும் கூத்து, நாடகம் என்றானது. கூத்துக் கலையிலே வல்ல ஆடவன் கூத்தன்’ என்றும், கூத்துக் கலையிலே வல்லவள் கூத்தி’ என்றும் வழங்கப் பெற்றனர். கூத்தில் வல்லவர்களைப் பழந்தமிழர் விரும்பிப் போற்றி னர் என்பதனைக் கபிலரின் புறப்பாடல் கொண்டு அறிய லாம். பறம்பு முற்றியிருந்த மன்னரை விளித்துக் கபிலர்,

யானறி குவனது கொள்ளு மாறே

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர இ. கா.-5