பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இலக்கியக் காட்சிகள்


மொழியினைப் பயிலத் தொடங்கிய அவர்கள் பின்னர் அம்மொழியில் இலக்கிய இலக்கணம் முதலாய துறைகளில் நூல் பல எழுதத் தலைப்பட்டனர்.

இவர்கள் மக்களிடையே தொண்டு செய்து அவர்கள் நம்பிக்கையினையும் அன்பினையும் முதலாவதாகப் பெற் றனர். பிறப்பினால் இவர்கள் உயர்வு தாழ்வு பாராட் டாமல் எல்லா மக்களையும் சமமாக எண்ணித் தொண்டு செய்தனர், இரண்டாவது, அஞ்சியவர்க்கு அடைக்கலந் தந்து போற்றினர். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் தென்கரையில் ஜம்பை என்று இன்று வழங்கும் கிராமம், அந்நாளில் வீரராசேந்திரபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. அங்குச் சோழதுங்கன் ஆள வந்தான் அஞ்சினான் புகலிடம் என்றோர் அடைக்கலப் பள்ளி இருந்ததாகச் சாசனம் ஒன்று கூறுகின்றது. இது போன்றே வடார்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுக் காவில் உள்ள கீழ்மின்னல் கிராமத்திலும், போனார் தாலுக்கா வட மகாதேவி மங்கலம் என்னும் ஊரிலும் காணப்படும் கல்வெட்டுகள் கொண்டு, அவ்வூர்களில் இத்தகைய அஞ்சினான் புகலிடங்கள் இருந்தன வாக அறியலாம்.

மூன்றாவதாக, மக்கள் பிணிநீக்கும் பெரும்பனியிலும் சமணர் ஈடுபட்டனர். மருந்துவக் கலையில் தேர்ச்சி பெற் றிருந்த இவர்கள் மருந்துத்தானமும் மக்கட்கு வழங்கினர். நான்காவதாகச் சாத்திர தானத்தினை மேற்கொண்டனர் கல்விக்கண் வழங்கும் திருப்பணியில் இவர்கள் ஈடுபட்ட னர். மேலும் ஈண்டொரு சிறப்புச் செய்தியினையும் குறிப் பிட வேண்டும். ஏடும் எழுத்தாணியுமே நிலவிய அந் நாளிற் செல்வம் படைத்த சமணர்கள் தங்கள் சமய நூல் களைப் பல படிகள் எழுதுவித்து அப்படிகளைத் தக்கார் பயிலத் தானம் செய்தனர் என அறிகிறோம். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் க ன் ன ட நாட்டில் இருந்த சமண