பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைனரும் தமிழ்நாடும் 77

சமயத்தைச் சார்ந்த அந்திமுப்பெ என்னும் பெண் மணி, சாந்தி புராணம் எனும் சமண சமய நூலினைத் தம் செலவில் ஆயிரம் படிகள் எழுதுவித்துத் தானம் செய்ததாக ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சமணமும் தமிழும்’ எனும் நூலில் (பக்கம்: 44) குறிப்பிட்டுள்ளார், இவ்வாறு சமண முனிவர்கள் அந் நாளில் தமிழ் நாட்டு மக்களிடையே அவர்தம் பயன் கருதாத் தொண்டின் கிறப்பினால் ஒர் உயர்நிலை பெற்று வாழ்ந்தனர்.

இவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் சிறப்புடையன என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. தமிழின் முதல் இலக்கண நூல் தந்த தொல்காப்பியனாரே சைனர் என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர் களது துணிபாகும், இக் கூற்றுத் தக்க காரணங்கள் காட்டப்பெறறு தமிழறிஞர் ஒரு சிலரால் அந்நாளிலும் பின்னாளிலும் மறுக்கப்பட்டது. ஆயினும், இந் நூலில் சமண சமயக் கொள்கைகள் சில காணப்படுகின்றன என்று காட்டுவர். உயிர்களை அறுவகையாகப் பிரித்துக் காணும் மரபியல் நூற்பாவினை எடுத்துக்காட்டாகவும் கூறுவர். திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறிச் சில சான்றுகளைக் காட்டுவர். இதுபோன்றே சிலப்பதி காரத்தில் இடம் பெறும் கெள ந்தியடிகள் வாயிலாக இளங் கோவடிகள் சமண சமயக் கொள்கைகளை விளக்குவத னால் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்றும் ஒரு சிலர் கூறுவர். பதினெண் கீழ்க்கணக்கு நூலுள் ஒன்றாகிய நாலடியார் எண்ணாயிரம் சமண முனிவர்களின் படைப்பு எனக் கூறும் பழைய கதையும் உண்டு. எஞ்சிய பதினெண் கீழ்க்கணக்கு துரல்களில் பழமொழி நானு று, ஏலாதி, சிறு பஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, அறநெறிச் சாரம் முதலான நூல்கள் சமண சமயப் புலவரால் எழுதப் பட்டன என்பர். இந் நூல்களைப் பற்றிய விரிவான ஆய்வு