பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இலக்கியக் காட்சிகள்


வேந்தர்கள் காலத்திலும் மக்கட்குச் சமூகப் பணி ஆற்றிய திறம் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.

இதுகாறும் கூறியவற்றால் சைன சமயப் பெரியோர் களால் தமிழ் இலக்கிய இலக்கண நிகண்டுத் துறைகள் வளர்ந்து செழித்தன என்பதும், சைன சமயத்தின் சிறந்த கோட்பாடுகள் தமிழரால் போற்றி ஏற்றுக்கொள்ளப் பட்டன என்பதும், மக்கள் தொண்டினை மனநிறைவோடு சைனசமயத்துறவிகள் ஆற்றி வந்தனர் என்பதும், தமிழ் உள்ள வரையில் அமண் சமயத்தார் அம்மொழிக்கு ஆற்றிய தொண்டு நின்று நிலவும் என்பதும் ஒருவாறு உரைக்கப் பட்டன எனலாம்.