பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பழந்தமிழரின் உலக நோக்கு

வரலாற்றுத் தொன்மையும் பெருமையும் வாய்ந்தது தமிழினம். தொன்னெடுங் காலத்திற்கு முன்னரே தமிழில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் பலவாகும். அவவிலக்கியங் கள் தமிழர்தம் வாழ்வை நன்கு படம் பிடித்துக் காட்டு கின்றன. இலக்கியம் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல் உண்மைகளை வைத்து நாம் கானும் பொழுது அவர்தம் பரந்த விரிந்த உலகக் கண்ணோட்டம் நமக்குத் தெற் றெனத் தெளிவாகின்றது. உலகவாம் நன்னோக்கம் பழந் தமிழரை வழிநடத்திச் சென்றுள்ளது என்பதனை நாம் பழம் பேரிலக்கியங்கள் கொண்டு அறியலாம்.

அ மெரிக்க எழுத்தாளர் வெண்டல் வில்கி’ என்பவர் ‘ஒரே உலகம்’ (One World) என்றதோர் நூலினை எழுதி னார். அந்நூலில், எதிர்காலத்தில் நம் சிந்தனைகள் உலகை அளாவியதாக இருக்கவேண்டும் (in future oபr think ng must be worldwide) ar gör DI GỒ)'ıl ? - l_rrữ. இந்தக் கருத்து உயர்வானதொன்று என்று கொண்டு அமெரிக்கர்கள் அவ்வாசிரியரைப் பெ ரு மி த த் து ட ன் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள், இற்றைக்கு ஈரா யிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே பழந்தமிழ்ப் புலவர்

്ത്രബേT,

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்று உலக மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக எண்ணிப் பாடிய உண்மையினை அறிய வருவரேயாயின்