பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இசைத்தமிழின் மறுமலர்ச்சி

தொன்மை

அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழி, முத் தமிழ் என முறையுடன் வழங்கப்பெறும். இயல், இசை, கூத்து எனப் பகுக்கப் பெறும் முத்தமிழில் நடுவானது இசைத் தமிழாகும். தமிழின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், இசைத்தமிழ் நூல்கள் அது போது தமிழகத்தில் வழங்கின என்ற குறிப்புப் பெறப்படுகின்றது.

அளபிறங் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.

(தொல்; எழுத்து, நூன்மரபு, நூற்பா, 33):

இந் நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரை கொண்டும், தொல்காப்பியனார் ஐந்து நிலத்திற்குரிய கருப் பொருட்களைக் குறிப்பிடும்பொழுது ஒவ்வொரு நிலத் திற்கும் ஒவ்வொருவகை யாழைக் குறிப்படுவது கொண் டும் இசைத்தமிழும், இசைக்கருவியும் பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த செய்தியினை அறியலாம்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலின் ஒவ்வொரு பாடலின் அடியிலும் அப் பாடலைப் பாடிய