பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இலக்கியக் காட்சிகள்


புலவரின் பெயரும், அப் பாடலுக்கு இசை அமைத்தவர் பெயரும், பண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறமகள் ஒருத்தி, குறிஞ்சி நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாட, அதுபோது தினைக்கதிரை உண்ண வந்த யானை, தினையினை உண்ணாமலும், அவ்விடத்தை விட்டு நீங்காமலும், பாடும் குறிஞ்சிப் பண்ணால் கவரப் பட்டு மனமுருகி நின்று, பின்னர் உறங்கியும் விட்ட செய்தி, பின்வரும் அகநானுாற்றுப் பாடலால் அறியப் படுகின்றது:

ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றெய்யென மறம்புகல் மழகளிறு உறங்கும் காடன்.

(அகநானூறு 102. 5-9)

வடமொழிவாணர் இராகம்’ என வழங்குவதனைத் தமிழர் பண்’ என்பர். திருவள்ளுவரும்,

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண்

- (திருக்குறள் : 573)

என்னும் திருக்குறளில், பண் பாடலோடு பொருந்தி வர வேண்டும் என்றும், கண் இரக்கங்காட்டும் குறிப்பை அருள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதனைக் காண லாம்.

வளர்ச்சி

சிலப்பதிகாரம். முத்தமிழ்க் காப்பியம் என்றே வழங் கப்படும். கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை,