பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இலக்கியக் காட்சிகள்


பெறத் தக்க தொண்டு செய்து, தமிழிசைக்குப் புத்துயிர் தந்து, ஒரு மறுமலர்ச்சி வாழ்வினை அளித்தவர், காலஞ் சென்ற செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களாவர். அவர்களின் அறிவாற்றலின் விளைவால் 1929ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் தோன்றிய பtனாட்சி கல்லூரி, 1932ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது, இந்தியப் பெரு நாட்டில், இசைக் கலையினை நான்கு ஆண்டுகள் கற்பித்துப் பட்டம் வழங்குகின்ற முதற் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகமேயாகும். 1936ஆம் ஆண்டு, அரசர் அவர்களின் முயற்சியால் இசை மாநாடு கூட்டப் பெற்றது. 16-11-1940ஆம் ஆண்டில் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில், செட் டி நாட்டரசர் அவர்கள், தமிழிசை வளர்ச்சிக் கென ரூபாய் பதினாயிரம் நன்கொடையாக வழங்கினார் கள். அண்ணாமலை நகரிலேயே 14-8-1941 முதல் 17-8-1941 வரையில் நான்கு நாட்கள், முதல் தமிழ் இசை மாநாடு கூட்டப் பெற்றது. இசை மேதைகள் பலர் அம் மாநாட்டில் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளியில் 4-9-1941-ல் பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் தலைமையில் கூட்டப் பெற்ற மாபெரும் கூட்டத்தில், அப் போது குமார ராஜாவாக விளங்கிய டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள், தமிழ் இசை இயக் கத்தின் சீரிய நோக்கங்களைச் சிறப்புற எடுத்துரைத்தார் கள் . 15-9-1941-ல் இசைக்கலைஞர் பலர் சேர்ந்து, தமிழ் இசை இயக்கத்திற்குத் தம் ஆதரவினைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். 16-9-1941-இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில், தமிழ் இசை இயக்கத்தினை ஊக்குதலிதன் பொருட்டு ஆதரவுக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இசை பாடற் போட்டிகள் நிகழ்த்தப் பெற்றன. பெருங் கொடை வள்ளல், அண்ணாமலை அரசர் அவர்கள் தாம் சீருடனும் சிறப்புடனும் கொண்டாடிய அறுபதாம்