பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழின் மறுமலர்ச்சி 95.

ஆண்டுவிழாவில், தமிழ் இசை வளர்ச்சிக்கு இரண்டாவது முறையாக ரூபாய் பதினையாயிரம் வழங்கினார்கள். 1943 ஆம் ஆண்டில், பண்டிதமணி மு . கதிரேசச் செட்டி யார் அவர்கள் தலைமையில், தமிழ் இசை ஆலோசனைக் (35(ԼՔ ஒன்று நியமிக்கப் பெற்றது. பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள், அக் குழுவிற்குச் செயலாளராக இருந்து பணியாற்றினார்கள்.

தேவகோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, குடந்தை, திருப்பத்துார், திண்டுக்கல், வலம்புரி, ஐயம் பேட்டை, திருநெல்வேலி முதலிய தமிழ் நாட்டு நகரங் களில் இசை மாநாடுகள் நடைபெற்றன. இசைக் சங்கங் கள் தொடங்கப் பெற்றன.

சென்னைத் தமிழ் இசைச்சங்கம் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், செட்டி நாட்டரசர் அவர்களால், சென்னை யில் நிறுவப்பெற்றது. 23-12-1943 முதல் 4-1-1944 வரை பெரியதொரு தமிழிசை மாநாடு சென்னையில் நடை பெற்றது. 23-1-1944ல் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் தமிழ் இசைக் கல்லூரி ஒன்றும் தொடங்கப் பெற்றது. மேலும், தமிழ் இசை இயக்கத்திற்குத் தொடக்கப் நாட் களில் ராஜாஜி, டி. கே.சி., சர். ஆர். கே. சண்முகம் செட்டி யார், பம்மல் சம்பந்த முதலியார் முதலிய பெரு மக்களின் ஆதரவு கிடைத்தது, இசைக் கலைஞர்களில் பேரும் புகழும் பெற்ற மேதைகள் பலர், தமிழ் இசை வளர்ச்சிக்குத் தலை யாய தொண்டாற்றினர். 1950ஆம் ஆண்டு தொடங்கிப் பண் ஆராய்ச்சிக் கூட்டங்களும் ஆண்டுதோறும் முறை யாக நடைபெற்று வருகின்றன. செட்டி நாட்டரசர் ராஜ சர் முத்தைய செட்டியார் அவர்களும், தமிழ் இசைச் சங்கத் தலைவர் திரு. மு. நாராயண சாமிப்பிள்ளை அவர்களும்,