பக்கம்:இலக்கியக் கேணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தத்தா நமரே காண்

மெய்ப்பொருளார் மாண்பு

மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று சிவ நெறியின் கண் ஒழுகியவர் மெய்ப்பொருள் நாயனர். இவர் திருக்கோவலூரில் வாழ்ந்த மிலாடர் கோமான் ; அன்பர் வேடமே சிங்தை செய்தவர் : திருக்கோயில் களில் பூசை விழா முதலியன புரிந்து வாழ்ந்தவர் ; " தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும்” என்று அடியார் களுக்குக் குறைவறக் கொடுத்தவர்.

முத்தங்ாதன் பகைமை

இவர்க்கு முத்தநாதன் என்ற ஒரு சிற்றரசன் பகைஞனயிருந்தான். அவன் மெய்ப்பொருள் நாயன ரோடு பலமுறை போர்புரிந்து தோற்ருன் ; நாயனரை இகலினல் வெல்ல முடியாது என்பதை அறிந்தான் ; திருவேடந்தாங்கிச் சென்று வஞ்சனையால் வெல்லக் கருதின்ை ; மெய்யெல்லாம் நீறு பூசினன்: கையினிற். படைகரந்த புத்தகக் கவளி ஏந்தினன் : நாயனரின் மாளிகையை அடைந்தான். *

முத்தங்ாதன் நினைத்த அப்பரிசே செய்தல்

திருவேடப் பொலிவழகு கண்ட காவலாளிகள் இவ் வஞ்சகனை அரண்மனையில் விடுத்தனர். நாயனர் இருந்த அறையிடத்துச் சென்ருன் முத்தநாதன். அங்குத் தத்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/11&oldid=676706" இலிருந்து மீள்விக்கப்பட்டது