உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி

117


யான் கண்டனன் அவன் வென்றி

ஆமூர் மல்லனைப் பெருநற்கிள்ளி வென்ற நிலையை நக்கண்ணையாரும் கண்டார். மல்லர்க் கடந்தடு நிலையைக் கண்டவருள் ஒரு சாரார், 'இவர்க்கு ஊர் இஃதன்று ஆகலானும், இவர்க்கு நாடு இஃதன்று ஆகலானும், இவர்க்கு இயல்பாய வென்றியை இவரது வென்றியே யாகும் ' என்று சிலர் சிறப்பாகப் பேசினர். இக் காரணத்தையே காட்டி, 'இஃது இவரது வென்றியன்று' என்று பிறிதொரு சாரார் கூறினர். நக்கண்ணையார் இவ்விரு சாராரது கூற்றையும் கேட்டார்; காற்சிலம்பொலிப் பத் தம் வீட்டருகே ஓடினார்; மனையருகே யிருந்த பனையைப் பொருந்தி நின்றார்; தன்வளையும் கலையும் அவன் பொருட்டு நெகிழ்தலின் அவனுக்குத்தான் தோற்றமை யால் அவனே வென்றவனாதலைக் கண்டார். இச்செய்திகளைக் கூறும் அவர் பாடல் பின் வருமாறு:-

என்னைக்(கு) ஊரிஃ(து) அன்மை யானும்
என்னைக்கு நாடிஃ(து) அன்மை யானும்
ஆடா(டு) என்ப ஒருசா ரோரே
ஆடன்(று) என்ப ஒருசா ரோரே
நல்ல பல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்(பு) ஒலிப்ப ஒடி எம்மில்
முழாவரைப் போந்தை பொருந்திநின்(று)
யான்கண் டனன்.அவன் ஆடா குதலே.

- புறம், 85


புறவுரை

இங்ஙனம் புலவர் பாடும் புகழுடையனாய் விளங்கியவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இவன் நக்கண்ணையாரை மணந்தனனோ என்பது தெரிந்திலது, இவன்