பக்கம்:இலக்கியக் கேணி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இலக்கியக் கேணி

மெச்சினர்; அவர்கள் சொற்படி அச்சமயங்களிற் சேர்ந் தனர். எனினும் மக்கள் மனம் ஊசலாடிக்கொண்டு தான் இருந்தது. 7 ஆம் நூற்ருண்டில் மதுரையில் ஆண்ட மாறவர்மனும், காஞ்சிபுரத்தில் ஆண்ட மகேங் திரவர்மன் என்னும் பல்லவ அரசனும் சமண சமயத் தைச் சார்ந்தவர் ஆக இருந்தனர். அச்சமயங்கள் அரசர் ஆதரவு பெறவே மக்களும் பெருவாரியாக அச்சமயங்க ளைச் சார்ந்திருந்தனர். சைவ வைணவ சமயங்கள்

தாழ்ந்திருந்தன.

இறைவன் திருவருளால் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவுக்கரசரும் சோழ நாட்டில் திருஞானசம்பந்தரும் தோன்றினர்கள். இருவரும் ஒன்று சேர்ந்து இசைப் பாடல்களைப் பண்ணுடன் பாடினர்கள். திருநாவுக்கர சர் மகேந்திர பல்லவ அரசனைச் சைவனக்கினர். திரு ஞான சம்பந்தரும் மாறவர்ம பாண்டியனைச் சைவத்தில் சேரச் செய்தார். சிவபெருமானே முழுமுதற் கடவுள்: சைவசமயமே மக்களுக்கு ஏற்ற சமயம்: இல்லறமே சிறந்த அறம்: இல்லறத்தில் இருந்தே இறைவன் அரு 2ளப் பெறலாம் என்று எளிய இனிய பாடல்களில் பழங் தமிழரது ஒழுகலாறுகளைப் போதித்தார்கள். மக்களும் மனம் மாறினர்கள், சைவ சமயத்தைச் சேர்ந்தார்கள். இங்ங்னம் சமயப்பற்று ஊட்டுதற்குக் கருவியா யமைந்த வையே தேவாரம். தேவாரம் என்ருல் கடவுளுக்குச் குட்டப்படும் பாமாலை என்பது பொருள். திருநாவுக் கரசர் பாடிய பதிகங்கள் 312; 8066 திருப்பாடல்கள். திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்கள் 888, 4147 திருப் பாடல்கள். இவ்விருவருக்கும் முன்பே வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார். இவர் அற்புதத் திருவந்தாதி