பக்கம்:இலக்கியக் கேணி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய இலக்கியம் 123;

இக்காலத்தில் வாழ்ந்தவரே சீத்தலைச் சாத்தனர் என்ற புலவர். அவர் எழுதிய காவியம் மணிமேகலை என்பது. இந்நூல் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேக லேயின் வரலாற்றைக்கூறுவது. இந்நூல் பெளத்த சமயக் கொள்கைகளை அழகாக இயம்புகிறது.

இச்சங்ககாலத்தில் மக்களிடையே சமய வேற்று மையில்லை. சமயத்தின் பேரால் சச்சரவுகளும் இல்லை. அவரவர் விரும்பிய சமயத்தை அவரவர் கடைப்பிடிக்க லாம். ஆகவே சமயத்தைப் பற்றியே போதிக்கும் நூல்கள் எழுந்தில. எனினும் திருமுருகாற்றுப்படை முருகப்பெருமானைப் பற்றிய சங்க நூல் என்பது அறிதல் தகும.

இச்சங்க காலத்துக்குப் பிறகு ஏறத்தாழ மூன்று நூற்ருண்டுகளை இருண்டகாலம் எனலாம். அக்காலத் திய வரலாற்றை நன்கு அறிவதற்குரிய சான்றுகள் இல்லை. களப்பிரர் என்ற வேற்றரசர் தமிழ் நாட்டில் புகுந்தனர். தமிழும் ஓரளவு புறக்கணிக்கப் பெற்றது. சமண சமயமும் பெளத்த சமயமும் இங்காட்டில் மிகவும் பரவின. வடமொழிச் சொற்ருெடர்களும் கருத்துக் களும் தமிழில் புகுந்தன. சங்கத் தமிழ் நடைமாறியது.

அன்றியும் இவ்விரு சமயங்களும் தமிழ் நாட்டுக் குரிய தொன்றுதொட்டு வழக்கிலிருந்த சமயங்கள் அல்ல; அச்சமயக் கருத்துக்கள் சில தமிழ் நாட்டுக்குப் பொருத்தம் அற்றவை. சமணர்களும் பெளத்தர்களும் கடுந்துறவு நிலையையே தமிழ் நாட்டில் போதித்தனர். மக்கள் முதலில் சமண பெளத்தர்களுடைய பேச்சைக் கேட்டனர்; அவர்களுடைய கல்வி கேள்விகளை நோக்கி.