பக்கம்:இலக்கியக் கேணி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இலக்கியக்கேணி

5. தென்றமிழ்ப் பயனுயுள்ள திருத்தொண்டத்

தொகை

6. ஞாலமுய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலமுய்யத் திருத்தொண்டத் தொகை முன்

L-ITI-. . . . . .

7. ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழவெடுத்துத், தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்

8. மூலமான திருத்தொண்டத் தொகை

9. மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத்,

தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப் போதுவார்.........

விறன்மிண்ட நாயனர் புராணத்தில், திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்பேறு தனக்குக் காரணராம் பிரானர் விறண்மிண்டர்’ என்றும்,

குலச்சிறை நாயனர் புராணத்தில், ' வன்ருெண்டர் தாம் ஒப்பரும் பெருநம்பி என்ருேதிய செப்பருஞ் சீர்க் குலச்சிறை ' என்றும் குறித்தமை இங்கு அறிதற் பாலனவாம்.

இனி, திருத்தொண்டத் தொகை. மக்கள் மனத் தைக் கவர்ந்ததொன்ருயிருத்தல் வேண்டும் என்பது கல்லெழுத்துக்களினின்று அறியப் பெறுகின்றது. திருத்தொண்டத்தொகை நினைவாகக் குகையும், மடமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/25&oldid=676720" இலிருந்து மீள்விக்கப்பட்டது