பக்கம்:இலக்கியக் கேணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டத் தொகை 29*

நிருத்தொண்டத் தொகை விண்ணப் பித்தல்

தில்லே நடராசப் பெருமான் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் 'திருமன்னிவளர” இரு கிலமடந்தை யும் என்று தொடங்கும் கல்லெழுத்துமுளது. இத்தொடக்கமுள்ள மெய்கீர்த்தி முதல் இராசேந்திர சோழனுடையது என்பது வெள்ளிடை. ஆனல் இதில் Hஆவது வரி வரையிலும் மெய்க்கீர்த்தி சரியாக உள்ளது. விக்கன கீர்த்தித் தக்கண லாடமும்” என்றதற்குப் பிறகு பிற கல்வெட்டுக்களில் காணப்படுவது போலக், கோவிந்த சந்தன் மாவிழிந்தோட” என்பது முதலிய செய்திகள் காணப்படாமல், ' வராகவெல்கொடி இராச பரிச்சின்னமும்' என்று செல்லுகிறது. 'திருமன்னி வளர ' என்ற மெய்கீர்த்திக்கு உரியவர் கோப்பரகேசரி பாவர்: ஆளுல் இம் மெய்கீர்த்திக்கு உரியவர் கோவிராச கேசரி இராசேந்திரன் எனப்பெறுகிரு.ர். எங்ங்ன மாயினும் சோழ மன்னர்களில் ஒரு இராசேந்திர சோழனது 24ஆம் ஆட்சியாண்டில், தில்லையில் மாசித் திருநாளில் திருத்தொண்டத்தொகை விண்ணப்பிக்க பெந்தம் அளிக்கப் பெற்றது என்று அறியலாம். (s. I. I. Vol IV Page 30). ** திருமாசித் திருநாளில் திருத் தொண்டத்தொகை விண்ணப்பம் செய்வார்க்குக் காசு ஐஞ்சும்” என்பது இக்கல்லெழுத்துப்பகுதி.

மக்கட்பெயர்

பிரான்மலைக் கல்வெட்டொன்றில் கையெழுத் திட்டவர்களுள் ஒரு வர் திருத்தொண்டத்தொகை யுடையார். மணிமங்கலம் என்னும் ஊர்க் கல்லெழுத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/30&oldid=676725" இலிருந்து மீள்விக்கப்பட்டது