பக்கம்:இலக்கியக் கேணி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியாதிருக்க 71

திருப்பரங்குன்றில் கண்ட காட்சிகளுள் ஒன்று இது. இன்னும் ஒரு காட்சி :

பொய் வளம் பூத்தன பாணன் பாட்டு

பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் ஒரு பாண னைத் தலைவியினிடம் அனுப்பினன். அப்பாணன் தலைவி யிடம் வந்து பாடினன். அதுகேட்ட தலைவி, 'பொன் அணியினையுடைய பாணு ' தலைவன் பரத்தையரோடு முயங்கினன் என்பதை அவனுடைய உடம்பிலுள்ள வடுக்கள் புலப்படுத்துகின்றன; ஆகையால் கட்டபாடை என்னும் பண்ணைத்தருகின்ற யாழ்நரம்பிற்கு இயைந்த நின்பாட்டுப் பொய் மிகுதியையுடையது ' என்று கூறினள்.

ருைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம் பூத்தன பாணுகின் பாட்டு.

பரங்குன்றின் சிறப்பு

செவ்வேள் விரும்புதலால் பரங்குன்று செவ் வேளைப் பயந்த இமயம் போலப் புகழ்பெற்றது (5-6).

மலைவளம் ஐந்து பொலிந்தது (15). (மலைவளம் ஐந்தாவன: அரக்கு இறலி செந்தேன் அணிமயிலின் பீலி, திருத்தகு நாவியோ டைந்து ' என்பதனாலறியப் படும்.) H

பரங்குன்றில் மழை முழங்கிய சிகரமும், அதன் கண் உள்ள கொடிமின்னும் செவ்வேளின் களிருெக்கும் (23–27), _ -.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/72&oldid=676767" இலிருந்து மீள்விக்கப்பட்டது