பக்கம்:இலக்கியக் கேணி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8 இலக்கியக்கேணி

தத்தை கீத சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ' பண்ணமை கல்யாழ் பலிக்கடன் வகுத்தற்குரிய நேரம் வந்தது ' என்று உதயணற்குத் தெரிவித்தனர். அவனும் போந்தனன். அவன் யாழைக் கொடுக்க யாழைக் கைவைத்தனள் வாசவதத்தை:

- தெய்வத் தன்ன திறலோன் காட்டக்

கைவைத் தனளால் கணங்குழை யாழென்’ (1-84:246-7).

உதயணன், தவாஅக் காதலொடு தகையாழ் காட்டும் உவாத்தி' (1-44:130) என்றும் பிறிதோ ரிடத்தும் கூறப்பெற்றுள்ளான். இங்ங்னம் உதயணன் யாழைக் கொடுத்தனன் என்று கூறப்பெற்ற போதிலும் பின்னர்ச் சாங்கியத்தாய் கூறும் பொழுது,

மாசில் வீணை மடமொழிக் கீந்தோன்

ஆசான் என்னும் சொற்பிறி தாமென (1-86: 308-9)

என்று கூறியுள்ளமையின், 'உதயணன் வாசவதத்தை யிடம் கொடுத்தது யாழா அல்லது வீணையா?’ என்ற வின எழத்தான் செய்கிறது.

ஒருநாள் சாங்கியத்தாயும் வாசவதத்தையும் பேசிக் கொண்டே இருந்தமையின் கீதசாலைக்குப் போக வேண்டிய கால ம் கடந்தது; சாங்கியத் தாய் காஞ்சனமாலையிடம் தோழியை நோக்கித், "தத்தை கற்றற்குரிய நேரம் கடந்து விட்டது; ஆகலின் உதய .ணன் தன் இருப்பிடத்துக்குச் செல்லலாம் ' என்று சொல்லியனுப்பினள். அவள் அங்ங்னம் சென்றுகூற உதயணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/79&oldid=676774" இலிருந்து மீள்விக்கப்பட்டது