பக்கம்:இலக்கியக் கேணி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இலக்கியக்கேணி

. வேழம் விலக்கிய யாழொடு செல்கென (1-83-189) என்ற பகுதியில் யாழால் வேழத்தை யடக்குதல் கூறிய பெருங்கதை ஆசிரியர்,

அணியிழை மகளிரும் யானேயும் வணக்கும் * மணியொலி வினே' (1-35: 100。101)

என்றும்,

வார்கவுள் யானை வணக்குதற் கியைந்த

வினேவிச்சை' (3–6: 114, 115) என்றும் விணையால் வேழத்தை யடக்குதல் கூறினர். இதனுைம் வீணையும் யாழும் ஒன்றே என்ற கருத்துடை யவர் பெருங்கதை யாசிரியர் என்பது உறுதி எய்தும்.

சீவக சிந்தாமணியில் யாழும் வீணையும்

சிவகனை (1002, 2335ஆம் செய்யுளில்) வீணை வித் தகன் என்றும், (செ. 28இல்) வீணைக்கிழவன் என்றும். (செ.2598இல்) வீணைவேந்து என்றும் கூறிய திருத்தக்க தேவர், (செ. 1021 இல்) யாழறிவித்தகன் என்றும் கூறினர்; (செ. 820இல்) வீணைவாட்போர்” என்றவர், (செ. 628 இல்) "யாழ்ப்படை பொருது” என்றும் கூறி யுள்ளார். இவற்ருல் யாழும் வீணையும் ஒன்றே என்ற கருத்துடையவர் திருத்தக்கதேவர் என்று கருத இடம் தருகிறது. i

வீணைபொருது (செ. 1796)-யாழாலே வென்று: வீணை நூல் பொர (செ. 663)-யாழை இசை நூலோடே வாசிக்க விணைப்போர் (செ.666)-யாழ்ப்போர்: வீணை வித்தகன் (1002)-யாழ்வென்று கொண்ட தத்தையை விரும்பினவன் என்று இங்ங்ன்ம் வீணை என்றதற்கு யாழ் என்றே உரை வகுத்தார் நச்சிஞர்க்கினியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/81&oldid=676776" இலிருந்து மீள்விக்கப்பட்டது