பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 புலவர் கா. கோவிந்தன்



கல்லாமையின் இழிவும் அம்மக்கள் உள்ளத்தே ஊன்றிப் பதியுமாறு எடுத்துக் கூறும் தொண்டு எங்கும், எப்பொழுதும் நடைபெற்ற வண்ணம் இருத்தல் வேண்டும். இந்த உண்மையினை உணர்ந்தவன் நெடுஞ்செழியன். அதனாலன்றோ, கற்றார் பெறும் பெரும் புகழ் இது, கல்லார் பெறும் பெரும்பழி இது, “கற்க கசடறக் கற்பவை, என்ற பொருள் நிறைந்த பொன்னுரையினைப் புகட்டும் அவ்வறப் பணியினைத் தானும் மேற்கொண்டான்.

“பெற்றெடுத்த மக்கள் அனைவரையும் ஒத்த அன்பே காட்டி வளர்க்கும் உயர்வுடையவள் தாய். அவ்வியல்புடையளாய தாயும், தன் மக்கள் பெற்றிருக்கும் கல்வியின் ஏற்றத் தாழ்வுகளுக் கேற்ப, நிறையக் கற்ற மகன்யால் பேரன்பு காட்டலும், கல்லாத மகன்பால் அன்பு காட்ட மறுத்தலும் செய்வள்.

“ஒரு குடியிற் பிறந்தார் அனைவரும் ஒத்த சிறப்புடையார் ஆதலின், அவர் அனைவரையும் ஒரு தன்மையராகவே மதித்தல் வேண்டும். ஆனால், அக்குடியில் பிறந்தாருள் மூத்தவன் கல்லாது காலம் கழிக்க, இளையோன் கற்றுத் துறைபோய பெரியோனாயின், அவ்விருவருள் மூத்தோனை ‘வா!’ என வாய் திறந்து அழைக்கவும் நானும் மக்கள், அவன் இளையோன் ஆட்டியாங்கு ஆட முன் வருவர்.

“பிறப்பினாலேயே நால்வகைப் படுவர் மக்கள். எனப் பிரித்து, அவருள் ஒருவர் பிறவியினாலேயே உயர்ந்தவராவர்; ஒருவர் பிறவியினாலேயே தாழ்ந்த வராவர்” எனச் சில அறநூல்கள் கூறுகின்றன. ஆனால்,