பக்கம்:இலக்கியச்சுவை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

14 நாட்டில் நடைபெறுகிற, நடைபெறப் போகிற ஜன நாயக, சமதர்ம, சமாதான நன் முயற்சிகள் யாவற்றிற்கும் நல் வாழ்த்துக் கூறிய பாரதியின் தீர்க்க தரிசன ஒலி எனது சிந்தனையில் ஆழ்ந்து எதிரொலித்தது. சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றும் இன்று சார்ந்த புலவர் தவவலியால் புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." என்றும் பாரதி தமிழ்த்தாய் வாயில் வைத்து ஆணையிட்ட அமுத மொழி என் நினைவில் விழுந்ததும் ஆனந்தக் கூத்தாடிற்று. நெஞ்சம் பட்டென்று மற்றொரு காட்சி மின்னிற்று. டாக்டர் புரானோவஸ்கி 'பிரிட்டனில் தலை சிறந்த விஞ்ஞானிகளில், முன்னணி எழுத்தாளர்களில் முதல் வரிசையில் நிற்பவர்களில் ஒருவர். அப்பெரியார் அண்மை யில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசினார். 'டெய்லி ஒர்க்கர்' என்ற பிரிட்டிஷ் இதழில் வெளிவந்த நான் படித்த அவருடைய பேச்சு எனது நினைவில் அடுத்தாற் போன்று மோதியது. அந்த விஞ்ஞானப் பெருந்தகை கூறிய சிற்சில மணிக் கருத்துக்களை மட்டும் கீழே தருகிறேன். "அணூசக்தி, தானே இயங்கும் யந்திரம், இட ஆக்கிர மிப்பு, ராக்கெட்டுகள், (செயற்கை கோளங்கள்) ஆகிய வற்றால் உருவாகிவரும் இரண்டாவது தொழில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தவல்ல ஒரு விரிந்த விஞ்ஞானக் கல்வி நிறைந்த ஜனநாயகத்தை நீங்கள் குறிக்கோளாக கொள்ள வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/18&oldid=1480286" இலிருந்து மீள்விக்கப்பட்டது